விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
X

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது, கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசிக்கு பின்பு ஓய்வே இல்லாமல் உழைத்த பலர் உள்ளனர். விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் குறுகிய காலத்தில் நாட்டில் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும்.தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிவதை தொடர வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!