கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பித்த காெரோனா அச்சம் இன்று வரை முடிந்தபாடில்லை. இது பொதுமக்களின் வாழ்க்கை, அரசியல், ஆன்மிகம், திருவிழாக்கள் என அனைத்திலும் மாற்றத்தை கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். மேலும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

Tags

Next Story
ai healthcare technology