கொரோனா தடுப்பூசி செயல்பாடு நாளை துவக்கம்

கொரோனா தடுப்பூசி செயல்பாடு நாளை துவக்கம்
X

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து அவற்றை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 6 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாளை இந்த ஊசி செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
ai healthcare products