வேளாண் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை

வேளாண் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை
X

மறு அறிவிப்பு வரும் வரை, மத்தியஅரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை, மத்தியஅரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எங்களிடம் உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம், சட்டத்தை இடைநிறுத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டத்தை இடைநிறுத்துவது வெற்று நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு குழுவை அமைப்போம், அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன்பின்னரே நடவடிக்கை எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!