மகாராஷ்டிரா தீ விபத்து : மோடி, ராஜ்நாத்சிங் இரங்கல்

மகாராஷ்டிரா தீ விபத்து : மோடி, ராஜ்நாத்சிங் இரங்கல்
X

மகாராஷ்டிரா அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள, பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், மகாராஷ்டிராவின் பண்டாராவில் நிகழ்ந்த தீ விபத்தில் பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு வேதனையாக உள்ளது. நாங்கள் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்று மோடி கூறியுள்ளார்.தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன், குழந்தைகளை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்