கொரோனா காலத்திலும் பல திட்டங்கள் தொடக்கம் : மோடி

கொரோனா காலத்திலும் பல திட்டங்கள் தொடக்கம்   : மோடி
X

இந்திய நாட்டை நவீனமயமாக்க, கொரோனா தொற்று காலத்திலும், பல திட்டங்கள் தொடங்கப்பட்டன என பிரதமர் மோடி கூறினார்.

மேற்கு ரயில்வேயின் பிரத்தியேக சரக்கு வழித்தடத்தில் 306 கி.மீ நீளமுள்ள ரேவார் - மதார் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வழித்தடத்தில் மிக நீண்ட இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம் மெஹ்வல்,கைலாஷ் சவுத்திரி, ராவ் இந்தர்ஜித் சிங், ரத்தன் லால் கத்தாரியா, கிருஷன் பால் குர்ஜார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும் என்ற மிகப் பெரிய அர்ப்பணிப்பு, இன்று புதிய உத்வேகம் பெற்றுள்ளது. ராஜ்கோட்டில் எய்ம்ஸ் தொடங்கியது, ஐஐஎம் சம்பல்பூர் தொடங்கியது, 6 நகரங்களில் சிறிய நவீன வீடு திட்டங்களைத் தொடங்கியது, தேசிய அணுகால அளவுகோல், 100வது கிசான் ரயில், கிழக்கு ரயில்வேயில் பிரத்தியேக சரக்கு ரயில் போக்குவரத்து போன்ற திட்டங்களை, மத்திய அரசு கடந்த 12 நாட்களில் மேற்கொண்டதை அவர் பட்டியலிட்டார். இந்திய நாட்டை நவீனமயமாக்க, கொரோனா தொற்று காலத்திலும், பல திட்டங்கள் தொடங்கப்பட்டன என அவர் கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!