விழிப்புணர்வுக்காக நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை

விழிப்புணர்வுக்காக நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை
X

2021-ம் ஆண்டில் காலண்டர் ஒன்றிற்கு உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மராத்திய நடிகை வனிதா கராத் நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார்.


கபீர்சிங் படத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடிகை வனிதா கராத் நடித்திருந்தார். இது அர்ஜுன்ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.புது வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதிகம் பேர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!