புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
X

உச்ச நீதிமன்றம் 

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றம் மற்றும் அதனையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதில் பல விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. டெல்லியில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அடிக்கல் நாட்ட அனுமதித்த நிலையில் நாடாளுமன்ற கட்டிடப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாடாளுமன்றம் கட்டும்போது மாசை குறைக்கும் கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்றும் புராதன சின்னங்களை நிர்வகிக்கும் அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!