மிஷன் உ.பி. பிரியங்காகாந்தி புது திட்டம்

மிஷன் உ.பி. பிரியங்காகாந்தி புது திட்டம்
X

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, 2022-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மிஷன் உ.பி.யை துவக்கி வைக்க உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வதேரா, 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மிஷன் உ.பி.யை துவக்கி வைக்க உள்ளார்.இதில் பிப்ரவரி முதல் லக்னோவில் முகாமிட்டு அங்கு அதிக நேரம் செலவிடுவார். காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களையும் பஞ்சாயத்து அளவில் கட்சியை பலப்படுத்தவும், அதற்காக குழுக்களை அமைத்து, கூட்டங்களை நடத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களைக் கூட்டி, பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டு, கூட்டங்களில் திடீர் வருகைகள் நடத்தப்போவதாக அவர் கூறினார்.

Tags

Next Story