கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும் : பிரதமர் மோடி

கொரோனா இல்லாத நாடாக இந்தியா மாறும் : பிரதமர் மோடி
X

கொரோனா இல்லாத நாடாக இந்தியா உருவாகவுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டனைத் தொடர்ந்து இந்தியாவும் அனுமதியளித்துள்ளது.இந்நிலையில் இந்த மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமை சேர்க்கிறது. கொரோனா இல்லாத நாடாக இந்தியா உருவாகவுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் ,முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!