பெட்ரோல் பம்புகள் மூடப்படும் விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

பெட்ரோல் பம்புகள் மூடப்படும் விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
X

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அன்று விவசாய சங்கங்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது போன்றவற்றை நிறைவேற்றவில்லை என்றால் ஹரியானாவில் மால்கள் மற்றும் பெட்ரோல் பம்புகள் ஆகியவை மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தினனை வாபஸ் பெறக்கோரி 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், விவசாய சங்கங்களும் மத்திய அரசும் சில முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்பட்ட மின்சார கட்டண உயர்வு மற்றும் வைக்கோல்போர் எரித்தல் போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. இருப்பினும் இரண்டு தரப்பிலும் எம்.எஸ்.பி. மற்றும் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தல் போன்றவற்றில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.இந்நிலையில் சிங்கு எல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விவசாய சங்கத்தினர், தாங்கள் எழுப்பிய பிரச்சனைகளில் வெறும் 5 சதவிதம் மட்டுமே இதுவரை ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்த அமைப்பான சம்க்யுக்த் கிஷான் மோர்ச்சா நடத்திய ஆலோலசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. விவசாய சங்கங்களின் முடிவுப்படி, ஜனவரி 4ம் தேதி எடுக்கப்படும் முடிவுகள் திருப்தியாக இல்லை என்றால், போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ட்ராக்டர் ஊர்வலம் குந்த்லி – மனேசர் – பல்வால் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளனர். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூரில் நடைபெற்று வரும் போராட்டக்காரர்களை டெல்லி நோக்கி அழைக்கவும் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் ஹரியானாவில் மால்கள் மற்றும் பெட்ரோல் பம்புகள் ஆகியவை மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!