இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை அனுமதிக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்

இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை அனுமதிக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்
X

இரண்டு ஆண்டுகளுக்காவது வேளாண் சட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயம் செய்பவர்களை நக்ஸல்கள், காலிஸ்தானியர்கள் என்று விமர்சிப்பது தவறு. பிரதமர் நரேந்திர மோடி ஏழைத் தாயின் வயிற்றில் பிறந்தவர். ஆனால் ராகுல் காந்தி வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு விவசாயம் குறித்து என்ன தெரியும்?.விவசாயிகளை நாங்கள் மதிக்கிறோம். விவசாயிகளுக்காக தலை வணங்குகிறோம். விவசாயிகளின் ஆர்வத்தோடு வேளாண் சட்டங்கள் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது வேளாண் திட்டங்களை செயல்பட விவாசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
marketing ai tools