குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
ராஜ்கோட்டில் நாளை (31-ம் தேதி) எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை காலை 11 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் குஜராத்தில் அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலத்தின் ஆளுநர், முதலமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மருத்துவமனைத் திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1195 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் கட்டிடமும் அமைக்கப்படும். இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu