மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது டெல்லி பிரதமர் மோடி
130 கோடிக்கும் அதிகமான மக்களின் மிகப் பெரும் பொருளாதார மற்றும் கேந்திர சக்தியாக டெல்லி விளங்குகிறது, அதன் மேன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை மற்றும் விமானநிலைய மார்க்கத்தில் டெல்லி மெட்ரோவின் தேசிய பொதுப் போக்குவரத்து சேவையை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பின் பேசுகையில் ,வரிச் சலுகைகளின் மூலம் மின்சார போக்குவரத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. தலைநகரின் பழமையான உள்கட்டமைப்பானது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய உள்கட்டமைப்பால் மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பழமையான சுற்றுலாத்தலமாக விளங்கும் டெல்லியில் 21-ஆம் நூற்றாண்டின் கண்கவர் தலங்களை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச மாநாடுகள், சர்வதேச கண்காட்சிகள், மற்றும் சர்வதேச வர்த்தக சுற்றுலா ஆகியவற்றின் விரும்பத்தக்கத் தலமாக டெல்லி விளங்குவதால் நாட்டிலேயே மிகப்பெரும் மையம் தலைநகரின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் புதிய நாடாளுமன்றம், மிகப்பெரும் பாரத் வந்தனா பூங்கா ஆகியவற்றை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் நகரத்தின் தோற்றமும் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu