ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை :டெல்லியில் நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை நாளை (28-ம் தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இப்புதிய சேவையை மட்டுமின்றி அனைத்து மார்க்கத்திலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கார்டு வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.
தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படும். முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும். மக்கள் அதிகம் பயணிக்காத நேரங்களில் சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு பார்க்கப்பட்டது.
இந்த சேவையுடன் தேசிய பொது போக்குவரத்து அட்டையையும் (என்சிஎம்சி) பிரதமர் தொடங்கிவைக்கிறார். டெல்லி மெட்ரோரயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ்பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டை மூலம் பணம் கூட ஏடிஎம்களில் எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu