எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நடத்திய உரையாடலில், எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் அரசியல் செய்வதாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி, 6 மாநிலங்களின் விவசாயிகளுடன் ஒரு உரையாடலை நடத்தினார். அப்போது, சில கட்சிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் ஒரு அரசியல் உள்நோக்கத்தை முன்வைக்கின்றன. ஒப்பந்த விவசாயத்தில் விவசாயிகள் நுழைந்தால் நிலம் பறிக்கப்படும் என்று சிலர் கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புகிறார்கள் என்றார்.தொடர்ந்து அவர் பேசும் போது, போராட்டம் தொடங்கியபோது அவர்களின் கோரிக்கை குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உறுதி செய்ய வேண்டும் என்பதாக இருந்தது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் விவசாயிகள் என்பதால் அவர்களுக்கு உண்மையாகவே பிரச்சினைகள் இருந்தன. ஆனால், பின்னர் அரசியல் சித்தாந்தம் உள்ளவர்கள் அந்த போராட்டத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றார்.
அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் விவசாயிகளை தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.இந்தியா முழுவதும் ஏராளமான விவசாயிகள் புதிய சட்டங்களை வரவேற்றுள்ளனர்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் கீழ் சமீபத்தில் ஒன்பது கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பிற மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu