வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற இந்திய கப்பல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற இந்திய கப்பல்
X

வியட்நாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்திய கப்பல் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள வியட்நாமில் அடிக்கடி வெள்ளம், சூறாவளி, கனத்த மழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் வியட்நாம் மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்தியக் கடற்படைக் கப்பல் ஐ. என். எஸ். கில்தான் எடுத்து சென்றது.நேற்று அக்கப்பல் ஹோசிமின் நகரத்தை சென்றடைந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!