வாஜ்பாய் பிறந்தநாள் : ஜனாதிபதி,பிரதமர் அஞ்சலி

வாஜ்பாய் பிறந்தநாள் : ஜனாதிபதி,பிரதமர் அஞ்சலி
X

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்,பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இந்திய பிரதமராக கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை பணியாற்றியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். அவரது 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், டெல்லியிலுள்ள சதைவ் அடல் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.அதே போல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!