வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்கள்
X
வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) கீழ் இயங்கும் வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (TFRI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி 42 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

தொழில்நுட்ப உதவியாளர்- 03, ஸ்டெனோகிராபர்- 02, எல்டிசி- 09, எலக்ட்ரீஷியன்(டெக்னீஷியன்)- 01, பிளம்பர்- 01, தச்சர்- 01, வனக் காவலர்- 03, எம்டிஎஸ்- 16 என மொத்த 42 இடங்கள்.

கல்வித் தகுதி:

தொழில்நுட்ப உதவியாளர் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தாவரவியல்/விலங்கியல்/உயிரியல்/உயிர் வேதியியல்/வனவியல் ஆகியவற்றில் பிஎஸ்சி தேர்ச்சி.

ஸ்டெனோகிராபர், LDC: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி.

எலக்ட்ரிக்கல்(தொழில்நுட்ப நிபுணர்): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ்.

பிளம்பர், கார்பெண்டர் (தொழில்நுட்ப நிபுணர்): 10ம் வகுப்பு தேர்ச்சி.

வனக் காவலர்: அறிவியலில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

MTS: 10வது தேர்ச்சி.

வயது வரம்பு:

தொழில்நுட்ப உதவியாளர்: 21 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை

ஸ்டெனோகிராஃபர், LDC, வனக் காவலர், MTS: 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகள் வரை

எலக்ட்ரிக்கல் (தொழில்நுட்பம்), பிளம்பர், கார்பெண்டர் (தொழில்நுட்ப வல்லுநர்): 18 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை

தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு ICFRE ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அனுமதிக்கப்படும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC/EWS பிரிவினருக்கு ரூ.1,300, மற்ற அனைவருக்கும் ரூ.800.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 05.03.2022 தேதி கடைசி.

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!