கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணிகள்
X
அனைத்துப் பணிகளுக்கும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 27.1.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்களவான :

1.பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.21,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குற்றவியல்/கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகப்பணி/ சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் வேண்டும்.

2. பணியின் பெயர்: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.21,000

கல்வித்தகுதி: BL/LLB/சட்டம் படித்திருக்க வேண்டும். குழந்தை நலன்/சமூக நலன்/தொழிலாளர் நலன் மற் றும் சட்ட உதவி சேவை முத லியவற்றில் ஒரு வருடம் கள அனுபவம் இருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: ஆற்றுப் படுத்துநர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி/சமூகவியல்களில் வழிகாட்டுதல்/ மருத்துவம்/மனநலம் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4. பணியின் பெயர்: சமூகப் பணியாளர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5. பணியின் பெயர்: கணக்காளர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: B.Com./M.Com. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏவாவது ஒரு

நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: தகவல்பகுப்பாளர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.14,000

கல்வித்தகுதி: BA/B.Sc. (புள்ளியியல் மற்றும் கணக்கு)/BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.10,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி, கணினி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: புறத் தொடர்பு பணியாளர்கள்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.8,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப் பூர்வ அறிவிப்பைக் காண : Notification

விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய : Application

இந்த விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 27.1.2022 தேதிக்குள் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, GT GÖST. 156,

சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி,

விழுப்புரம்-605 401. தொலைபேசி எண்:

04146-290659. dcpuvpm1@gmail.com.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!