பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு உத்திரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பணிகள்
உத்திரகாண்ட் மாநிலத்தில், உத்திரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையத்தில் கரும்பு மேற்பார்வையாளர், தோட்ட மேற்பார்வையாளர், போன்ற பதவிகளுக்கு 100 காலிப்பணியிடங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரங்கள் :
பணியிடம் மற்றும் வயது வரம்பு
கரும்பு மேற்பார்வையாளர் - சர்க்கரை தொழில் துறை 21 முதல் 42 வயது வரை.
கார்டன் ஓவர்சீயர் -18 முதல் 42 வயது வரை.
மாநில பால் மேற்பார்வையாளர் - 21 முதல் 42 வயது வரை,
தோட்ட மேற்பார்வையாளர் - 21 முதல் 42 வயது வரை,
உணவு பதப்படுத்துதல் - 21 முதல் 42 ஆண்டுகள்,
சம்பள விபரம் :
கரும்பு மேற்பார்வையாளர்
சர்க்கரைத் தொழில் துறை ரூ.25,500/- முதல் ரூ.81,100/- , கார்டன் ஓவர்சீயர் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை , மாநில பால் மேற்பார்வையாளர் ரூ.25,500/- முதல் ரூ.81,100/வரை, தோட்ட மேற்பார்வையாளர் ரூ.21,700/- முதல் ரூ.69,100/வரை, உணவு பதப்படுத்துதல் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை கிடைக்கும்.
விண்ணப்பக்கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 300 ம், எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி மற்றும் எக்ஸ் சர்வீஸ் மேன் போன்ற பிரிவினர்களுக்கு ரூபாய் 150 ஆகும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12/03/2022
மேலும் இந்த வேலைவாய்ப்புத் தொடர்பாக முழுவிபரங்களை அறிய அதிகார பூர்வ இணையத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள் .
அதிகார பூர்வ இணையதளம் : sssc.uk.gov.in
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu