ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
HAL Recruitment 2022-பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஏரோநாட்டிகல் தொழில்துறையாகும்.
இந்நிறுவனத்தின் பெங்களூருவில் இயங்கி வரும் டெக்னிக்கல் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (டிடிஐ), எச்ஏஎல்(பிசி), சிஎன்சி புரோகிராமர் கம் ஆபரேட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் வெல்டர் டிரேட்களில், 15 முதல் 24 மாதங்கள் முழு கால தொழிற்பயிற்சிப் பயிற்சிக்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலியிடங்கள்: பயிற்சியாளர்கள்-120 இடங்கள்
கல்வித்தகுதி:
1. SSLC/10th அல்லது அதற்கு சமமான குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் பொது/OBC விண்ணப்பதாரர்களுக்கு 60% மற்றும் SC/ST/PWD வேட்பாளர்களுக்கு 50% தேர்ச்சி.
2. 01-10-2022 தேதியின்படி 15-18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. கர்நாடக மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணபதாரர்கள் முன்னுரிமை.
4. அப்ரண்டிஸ்ஷிப் சட்டம் 1961ன் படி இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்த இடங்களில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: மத்திய அசின் வழிகாட்டுதல்கள் படி உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 09-09-2022
மேலும் விபரங்களுக்கு: Click Here
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu