Wadia Institute of Himalayan Geology -ல் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்

Wadia Institute of Himalayan Geology -ல் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்
X
Wadia Institute of Himalayan Geology -ல் பல்வேறு பணிகள்: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடுன்னில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் வாடியா இன்ஸ்ட்டியூட்டில் ஹிமாலயன் புவியியல் பிரிவில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் .

இதுகுறித்த விபரங்கள் :

1. பணியின் பெயர்: Scientist 'C'

காலியிடங்கள்: 2 (UR)

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.15,600 39,100/

கல்வித்தகுதி: Geoscience-ல் Ph.D. பட்டம் தேர்ச்சியுடன் 4 வருட அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Scientist 'B'

காலியிடங்கள்: 9 (UR-2, | ST-1, SC-1, OBC-4, EWS-1)

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.15,600 39,100/

கல்வித்தகுதி: Geology Geophysics பிரிவில் முது கலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Administrative Officer

காலியிடம்: 1 (UR)

வயது: 35 வயதிற்குள்இருக்க வேண்டும். சம்பளவிகிதம்: ரூ.9,300 34,800

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப் பில் தேர்ச்சியுடன் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


4. பணியின் பெயர்: Technical Assistant

காலியிடங்கள்: 3 (SC-1, ST 1,OBC-1)

கல்வித்தகுதி: இன்ஜினிய ரிங் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Upper Division Clerk

காலியிடங்கள்: 4 (SC-1, UR 2, OBC-1)

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

6.பணியின் பெயர்: Drafts man

காலியிடங்கள்: 2 (UR-2, OBC-1)

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Lower Division Clerk

காலியிடங்கள்: 3 (UR-1, SC 1, OBC-1)

கல்வித்தகுதி: பள்ளி இறுதி யாண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் 35வார்த்தைகள் ஆங்கிலத்திலும் 30 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய தெரிந்தி ருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Driver

காலியிடங்கள்: 3 (UR-2, SC-1)

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத் துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் Motor Mechanism-ல் அறிவு பெற்றவராகவும் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: Field Cum-Laboratory Attendant

காலியிடங்கள்: 5 (UR-2, SC-1, OBC-1, EWS-1)

கல்வித்தகுதி: பள்ளி இறுதிக் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10.பணியின் பெயர்: Field - Attendant

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1).

கல்வத்தகுதி: பள்ளி இறுதிக் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணி எண் 4 மற்றும் 6-க்கு 28 வயதிற்குள்ளும், பணி எண் 5, 7,8-க்கு 27 வயதிற்குள்ளும், பணி எண் 9,10-க்கு 25 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

பணி எண் 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-ற்கான சம்பளவிகிதம்: 5.5,200-20,200

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். ஒவ்வொரு பணிக்கேற்ற கட்டண விபரம், விண்ணப்ப படிவம் கீழே லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://wihg.in

விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சல் முகவரி, மொபைல் நம்பர், தனிப்பட்ட விபரம் இணைக்கவும். நவீன கலர் புகைப்படம், கருப்பு பேனா கையொப்பம், கல்வித் தகுதி, அனுபவம், பிறப்பு, ஜாதி சான்றிதழ் அனைத்தையும் ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.8.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இணையதள லிங்கை முழுவதும் படித்து பார்க்கவும்.

அதிகாரபூர்வ இணையதளம் www.wihg.res.in

Advt No. General Recruit./ WIHG/2020-21/Estt/

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil