CSIR- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

CSIR- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
X
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

காரைக்குடியிலுள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர், காலியிடங்கள், சம்பளவிகிதம், வயது விபரங்கள் ஆகியவை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


வயது உச்ச வரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.500. இதனை இந்தியன் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

http://www.cecri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 14.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து, கையொப்பமிட்டு 25.2.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் பணி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Controller of Administration,

CSIR-Central Electrochemical Research Institute,

Karaikudi - 630 003, Tamil Nadu.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண: Notification

இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!