இந்திய வனப்பணிக்கான தேர்வு: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு -காலியிடங்கள் 151

இந்திய வனப்பணிக்கான தேர்வு: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு -காலியிடங்கள் 151
இந்திய வனப் பணி (IFS) 151 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இந்திய வனப் பணி (IFS) தேர்வுக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. மொத்தம் 151 காலிப்பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விபரங்களவான:

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 32 ஆண்டுகள். அரசு விதிகளின்படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித் தகுதி:

கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல், வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் 100/- மற்றும் பெண்/SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

5 ஜூன் 2022 அன்று நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். UPSC IFS 2022 இல் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2022

வங்கியில் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 21 .02. 2022

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 22.02.2022

IFS முதன்மைத் தேர்வு தேதி 2022: 05.06.2022

Important Links:


மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைன் விண்ணப்பம்: Apply Online

Tags

Read MoreRead Less
Next Story