முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
X
முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு 2207 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Post Graduate Assistant

காலியிடங்கள்: 2207

காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள பாடப்பிரிவுகள் விபரம் வருமாறு:


சம்பள விகிதம், தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய நாட்கள் விபரம் வருமாறு :


கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

TRB-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து (Main Subjects) 110 - மதிப்பெண்களுக்கும், Education Methodology 30 மதிப் பெண்களும், GK -10 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். மொழித்தாள் தவிர இதர பாடங்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500 (SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் ரூ.250). இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 17.10.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக் வேண்டும்.

பாடவாரியாக உள்ள காலியிடங்கள், காலியிட பகிர்வு, மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: http://trb.tn.nic.in

மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!