முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்ய 09.09.2021 முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இதற்கான கடைசி தேதி கடந்த மாதம் 17ம் தேதி வரை இருந்தது.
தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 9ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
அதன்படி, இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால ஆவகாசம் நாளையுடன் (14.11.2021) முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு 2207 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணியின் பெயர்: Post Graduate Assistant
காலியிடங்கள்: 2207
காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள பாடப்பிரிவுகள் விபரம் வருமாறு:
சம்பள விகிதம், தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய நாட்கள் விபரம் வருமாறு :
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
TRB-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து (Main Subjects) 110 - மதிப்பெண்களுக்கும், Education Methodology 30 மதிப் பெண்களும், GK -10 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். மொழித்தாள் தவிர இதர பாடங்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.500 (SC/ST/SCA பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் ரூ.250). இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக் வேண்டும்.
பாடவாரியாக உள்ள காலியிடங்கள், காலியிட பகிர்வு, மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: http://trb.tn.nic.in
மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu