TNPSC-யில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

TNPSC-யில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
X
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வௌியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கு 06.09.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

வனத்தொழில் பழகுநர் - 10 இடங்கள்

சம்பளம்: ரூ.37,700 -1,38,500

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயதை நிறைவடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது 39 ஆண்டுகள் ஆகும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்:

நிரந்திரப் பதிவுக்கட்டணம்: ரூ.150/-

தேர்வுக் கட்டணம்: ரூ.150/-

ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முன்னாள் ராணுவத்தினர் 2 முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!