திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
X
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதற்கு, அதன் தலைவர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 21ம் தேதி, திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வுகள் நடக்கும். அன்றைய தினம், காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் மையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்றார்.

நடப்பாண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளதாக குறிப்பிட்ட பாலசந்திரன், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும் என்றார்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!