/* */

நீங்க... உங்க இ.பி. பில்லை ஆன்லைனில் கட்டணுமா? ... உடனே ரிஜிஸ்தர் செய்யுங்க....

TNEB Online Payment New User Registration- தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் கியூவில் நின்று இ.பி. பில்லை கட்டவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் ஆன்லைனில் நாமாகவே கட்டலாம். அது எப்படி ? என்று பார்ப்போம்.

HIGHLIGHTS

நீங்க... உங்க இ.பி. பில்லை ஆன்லைனில் கட்டணுமா? ... உடனே ரிஜிஸ்தர் செய்யுங்க....
X

TNEB Online Payment New User Registration-

உலகமே கையடக்கத்துள்ள வந்தாலூம் நம்மாளுக இன்னும் கியூவில் நின்றுதான் கட்டுவேன் என அடம்பிடிக்கும் ஒரு சிலரைத் தவிர பலரும் தற்போது அனைத்து வேலைகளையும் ஆன்லைனில் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க... போங்க....

தமிழகத்தினைப்பொறுத்தவரை பெரும்பாலும் இ.பி. பில்லை பலரும் இன்றும் ஆன்லைனில் கட்ட மறுப்பு தெரிவித்துநேரடியாகதான் செலுத்துகின்றனர். மின்வாரியமே ஆன்லைனில் பில்லை கட்டுங்க என கவுன்டரில் சொன்னாலும் இவர்கள் கால்கடுக்க நின்றுதான் கட்டுகின்றனர். ஏன்னா... இது வெளிச்சமான விஷயம் ஆச்சே.... ஒரு சிலருக்கு ஆன்லைனில் கட்டினால் கரெக்டா அவர்களுக்குபோய் பணம் சேருமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது. கவலையே படாதீர்கள்... நேரத்தினை குறைக்கவே இதுபோன்ற தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று பாருங்க...பல ஏடிஎம்களில் காத்துதான் வாங்குது... முன்பெல்லாம் ஒவ்வொரு ஏடிஎம்க்கும் ஒரு செக்யூரிட்டிஇருந்தனர்.தற்போது பொதுமக்களின் வருகை குறைந்ததால் பேங்குகள் தங்கள் நிர்வாக செலவினத்தைக்குறைத்துவிட்டன. காரணம் என்ன தெரியுமா? எல்லா பண பரிவர்த்தனைகளும் தற்போது கூகுள்பே... போன்..பேயில் கட்டிவிடுகின்றனர். இல்லாவிட்டால் நெஃப்ட் டிரான்ஸ்பரில் நடக்குது... அவ்வளவுதாங்க...இருந்த இடத்திலேயே வேலை முடியுது... ஏன் அலையறீங்க...சரி விஷயத்துக்கு வருவோம்.. இபி பில்லை நீங்க ஆன்லைனில் கட்டணுமுன்னா முதலில் உங்கள் பெயரை ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். அது எப்படி பார்ப்போமா?

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுடைய மின்கட்டணத்தினை செலுத்த தேவையில்லை. ஆன்லைனில் கட்டினால் போதும். உங்கள் நேரம் மிச்சமாகும்..நான் இதுவரை ஆன்லைனில் கட்டியதே இல்லைங்க... என்ன செய்யணும்னு கேட்கிறீர்களா? ஒவ்வொரு படிநிலைகளாக செய்துட்டு வந்தால்நீங்கள் ஆன்லைனில் பணம் கட்ட தகுதியானவராகிவிடுவீர்கள். பிறகு தொடர்ந்து இருந்த இடத்தில் இ ருந்து உங்களுடைய மின்கட்டணத்தினை செலுத்த முடியும்.ஸ்மார்ட் போன் மூலமாகவே ஆன்லைனில் வெப்சைட்டிற்கு சென்று இ.பி. பில்லை கட்டிவிடலாம் (மாதிரி படம் )

படி:1

மின்வாரியத்தின் ஆன்லைன் போர்டலுக்கு போங்க...

https://www.tnebnet.org/awp/login இந்த ஐடியை லாக்இன் பண்ணுங்க..இது ஓபன் ஆனவுடன் நியூ யூசர் என்தை கிளிக் செய்யுங்க..கிளிக் செய்தவுடன் ரிஜிஸ்ட்ரேஷன் பக்கம் ஓபனாகிவிடும்.

படி-2:

ஏற்கனவே இருக்கும் இபி கனெக்‌ஷன் நெம்பரை செலக்ட் செய்யுங்க. (எக்ஸிஸ்டிங்க சர்வீஸ் கனெக்‌ஷன் நம்பர்)பின்னர் என்டரை தட்டுங்க..

படி-3:

பின்னர் நீங்கள் உங்களுடைய இ.பி. மண்டலத்தினை கொடுத்துள்ள 9 மண்டலங்களின் ஊர்களிலிருந்து தேர்வு செய்யவேண்டும்.

படி-4:

பின்னர் நீங்கள் உங்களுடைய மின்வாரிய கணக்கீடு அட்டையின் மேற்புறம் எழுதப்பட்டுள்ள 10 டிஜிட் கன்ஸ்யூமர் நெம்பரை பதிவு செய்யவும்.

படி-5:

பின்னர் செக் டீடெய்ல்ஸ் என்பதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் உங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் திரையில் தெரியும். அதனை நீங்கள் கன்பார்ம் செய்யவேண்டும். செய்தபின்னர் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய ரிஜிட்ரேஷன் விண்ணப்பம் திரையில் தோன்றும்.

படி-6:

திரையில் வந்த ரிஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பத்தில் சிறு தவறு இல்லாமல் பூர்த்தி செய்து பின்னர் ஒரு முறைக்கு இருமுறை செக் செய்த பின்னர் சப்மிட் என்பதை கிளிக் செய்யவேண்டும்.

படி-7:

சப்மிட் கொடுத்த பின்னர் உங்களுக்கு உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் நீங்கள் ரிஜிஸ்டர் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு வரும். இதோடு ரிஜிஸ்டர் செய்யும் முறை முடிந்தது.

மேலும் நீங்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய சர்வீஸ் கனெக்‌ஷன் நெம்பரை வேறு யாரேனும்இதற்கு முன்னர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தால் உங்களுக்கு (கன்ஸ்யூமர் ) நுகர்வோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளார் என்ற தகவல் வரும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் இதுகுறித்தான புகாரை தெரிவிக்கலாம். பின்னர் வேறு பெயர் மற்றும் இமெயில் ஐடியினை நீங்கள் அந்த புகார் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 7 நாட்களுக்குள் இந்த கணக்கு முடியாத பட்சத்தில் அது தானாகவே அழிந்துவிடும்.

புதியதாக கணக்கு துவங்கிய பின்னர் உங்களுடைய சர்வீஸ் நெம்பரை சேர்க்கவும்.

படி-1:

டின்இபி வெப்சைட்டுக்குள் நுழைந்து லாக்.இன் செய்யவும்

படி-2: சர்வீஸ்நெம்பரை கிளிக் செய்து பின்னர் உங்கள் மண்டலத்தின் பெயரை செலக்ட் செய்யவும்.

படி-3:

கஸ்டமர் நெம்பரை என்டர் செய்து பின் சர்வீஸ் நெம்பரை சேர்க்கவும் பின்னர் செக்டீடெய்ல்ஸ் ஐ கிளிக் செய்யவும்.

படி-4:

பின்னர் உங்களுடைய பெயர், முகவரி, மற்றும் சர்வீஸ் கனெக்‌ஷன் சம்பந்தப்பட்ட விபரங்கள் திரையில் தோன்றும். அவைஅனைத்தும் சரி என்றால் கன்பார்ம் பட்டனை அழுத்தவும்.

https://www.tnebnet.org/awp/login.இந்த வெப்சைட்டை ஓபன் செய்யவும்.

படி-2:

தற்போது பேமென்ட் என்ற பக்கம் திரையில்தோன்றும். உங்களுடைய மின்கட்டணம் எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்பது திரையில் தோன்றும்.

படி-3:

கட்டணத்தினை செலுத்துவதாக இருந்தால் பே- பட்டனை அழுத்தவும். இது உங்களை பேமன்ட் வழிக்கு அழைத்து செல்லும்.

ஆன்லைனில் கட்ட

கிரிடிட் / டெபிட் கார்டு பேமன்ட்

நெட்பேங்கிங் பேமன்ட்,

வேறு டெபிட் கார்டு பேமண்ட் என மூன்று வாய்ப்புகள் வரும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவதாக இருந்தால் முதலாம் படி வழிமுறைகளை பின்பற்றவும். அல்லது நெட்பேங்கிங் என்றால் இரண்டாவது படி வழிமுறைகளை பின்பற்றவும்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு

படி-1:

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பேமென்ட் வழிமுறையின் படி கார்டைப்பயன்படுத்திசெலுத்தவேண்டும்.

படி:

பேமென்ட் வழியை செலக்ட்செய்தபின் விதிமுறைகளுக்கான பக்கம் ஓபன் ஆகும். அனைத்துவிதமான கன்டிஷன்களையும் நான் ஒப்புக்கொள்கிறேன் என ஒரு பாக்ஸ் வரும். அதனை ஓகே கொடுத்து விட்டால் கன்பார்ம் பே கிளிக் செய்யவும்.

படி:

நெட் பேங்க் மூலம் செலுத்துபவர்களுக்கு

படி-1

உங்களுக்கான நெட்பேங்கிங் கணக்கினை திரையில் உள்ள லிஸ்டில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.

படி-2:

நீங்கள் பேமென்ட் செலுத்தும் முறைக்கு பிறகு டெர்ம்ஸ் அன்டு கன்டிஷன்ஸ் பக்கம் ஓபன் ஆகும். அதற்கு நாம் ஒப்புக்கொண்டோம் என செலக்ட்செய்தபின்னர் கடைசியில் கன்பார்ம் பே கிளிக் செய்யவும்.

படி-3:

ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் பக்கம் ஓபன் ஆகும். நெட்பேங்கிங்கை லாக்இன்செய்து உங்களுடைய கட்டணத்தினை செலுத்தலாம்.

படி-4:

உங்களுக்கான இ-ரசீது திரையில் தோன்றும் அதனை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.

எந்தெந்த பேங்குகள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிஎன்எஸ்சி பேங்க், லக்ஷ்மி விலாஸ் பேங்க், டிஎம்பி, ஐசிஐசிஐ பேங்க், சிட்டியூனியன் பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், இந்தியன் பேங்க், ஐடிபிஐ பேங்க், எச்டிஎப்சி பேங்க், ஐஓபி பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா , பெடரல் ரிசர்வ் சிஸ்டம், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 5:10 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...