சேவை மையத்தில் "பெண் விசாரணை பணியாளர்" பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

சேவை மையத்தில் பெண் விசாரணை பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன
X
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பெண் விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பெண் விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர், சமூகப் பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், சமூகப்பணியில் முதுகலை பட்டம் பெற்ற வரும் விண்ணப்பிக்கலாம், வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவது, கவுன்சிலிங் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய்.15000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அன்ற எண்: 67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி மாவட்டம் என்ற முகவரியில் வரும் 30.06.2020க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!