+2 தகுதியுடன் தட்டச்சு படித்தவர்களுக்கு தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் பணிகள்

+2 தகுதியுடன் தட்டச்சு படித்தவர்களுக்கு தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் பணிகள்
X
+2 தேர்ச்சியுடன், தட்டச்சு படித்தவர்களுக்கு கோவாவிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் பணிகள்

கோவாவிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (Finance & Accounts), Junior Secretariat Assistant (Stores & Purchase) ஆகிய பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள் :

1.பணியின் பெயர்: Junior Secretariat Assistant (General)

காலியிடங்கள்: 7 (UR-4, OBC-2, ST-1)

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Finance & Accounts)

காலியிடங்கள்: 3 (UR-2, OBC-1)

3. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Stores & Purchase)

காலியிடங்கள்: 5 (UR-3, (OBC-2)

இந்த மூன்று பணிகளுக்குமான சம்பளவிகிதம், வயது, கல்வித்தகுதி விபரங்கள் வருமாறு:

சம்பளவிகிதம்: ரூ.19,900 - 63,200

வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தை கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் அளவிற்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள், தட்டச்சு திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் Mental Ability/General Knowledge/English Language போன்ற பிரிவுகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/PWD/ பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.nio.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை (Advt. No : REC-01/2021) முழுமையாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://www.nio.org

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.9.2021

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு