ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) 1226 காலி பணியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) 1226 காலி பணியிடங்கள்
X
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சர்க்கிள் அடிப்படையிலான 1226 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) வட்ட அளவிலான அதிகாரிகள் (CBO) 1226 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்

மொத்த காலியிடங்கள்

வட்டம் அளவிலான அதிகாரிகள் (Circle Based Officers)

1226

காலியிடங்கள்:

Regular: தமிழ்நாடு - 250, கர்நாடகா - 250, குஜராத் - 300, மத்தியப் பிரதேசம் - 150, சத்தீஸ்கர் - 50, ராஜஸ்தான் - 100.

Backlog: குஜராத் - 54, கர்நாடகா - 28, மத்தியப் பிரதேசம் - 12, சத்தீஸ்கர் - நாடு - 26, ராஜஸ்தான் - 04.

வயது வரம்பு:

வரும் டிசம்பர் 1ம் தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST, OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள். (NCL) மற்றும் PwDக்கு பிளஸ் 10 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம்: ₹ 36,000/- ₹ 36000-1490 / 7-46430-1740 / 2-49910-1990 / 7-63840.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம்:

UR / OBC / EWS பிரிவினர் ரூ.750/- செலுத்த வேண்டும்.

SC / ST / PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தகுதியான விண்ணப்பதாரர்கள் SBI IBPS ஆன்லைன் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் 29/12/2021 கடைசி தேதி. https://ibpsonline.ibps.in/sbircbonov21/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு https://bank.sbi/careers என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!