தமிழக தபால் துறையில் Staff Car Driver பணிகள் : காலியிடம்17

தமிழக தபால் துறையில் Staff Car Driver  பணிகள் :    காலியிடம்17
X
பணியிடம் : கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம். விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.3.2022

தமிழ்நாடு தபால் துறையின் Mail Motor Service பிரிவில் காலியாக உள்ள Staff Car Driver பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

பணி : Staff Car Driver

காலியிடம் : 17

பணியிடம் , காலியிட விபரங்கள் கீழே அட்டவணையில் உள்ளது


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது தபால்துறையில் குரூப் 'C' பணியாளர்களாக இருக்கும் (Dispatch Rider "Group c") நபர்கள் மட்டும் பணிபுரிந்து கொண்டிருக்கும் தபால் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 வருட பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பிறகு 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முறை :

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும், விண்ணப்ப படிவம் பெறவும்

இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.indiapost.gov.in

இதில் உள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 10.3.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Manager, Mail Motor Service, Goods Shed Road,

Coimbatore-641 001.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!