தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு; 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு; 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

தென்னக ரயில்வே வேலை வாய்ப்பு அறிவிப்பு

தென்னக ரயில்வேயில் 12th. டிகிரி படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) சிறப்பு பிரிவில் காலியாக 21 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விளையாட்டுத்துறையில் சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்படும். தகுதியானவர்கள் 30.11 2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 21

கல்வித் தகுதி -12 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற தகுதிகள் - ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் - பதவிகளுக்கு ஏற்ப அடிப்படை சம்பளம் ரூ. 19,900 முதல் 29,200 ஆக உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை -திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை - இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rrcmas.in/downloads/rrc-sports-appn-web.pdf என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.11.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - உதவி பணியாளர் அலுவலர், ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, தெற்கு ரயில்வே 3வது தளம், எண் 5 டாக்டர்.பி.வி.செரியன் கிரசன்ட் சாலை, எழும்பூர், சென்னை - 600 008.

விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rrcmas.in/downloads/rrc-sports-en-web.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!