சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு புதுச்சேரியில் அரசுப்பணிகள்

சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு புதுச்சேரியில்  அரசுப்பணிகள்
X
12-ம்வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன், ஸ்டெனோகிராபி ஆங்கிலத்தில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரியில் 35சுருக்கெழுத்தர் கிரேடு-2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இது குறித்த விபரங்கள்:

காலியிட விபரங்கள்:

காலியிடங்கள் : 35

பொது - 15, இடபிள்யூஎஸ் - 3, எம்பிசி-6, ஓபிசி - 3, எஸ்சி - 5, இபிசி - 1, பிசிஎம் 1, பிடி - 1.

கல்வித் தகுதி

இப் பணிக்கு விண்ணப்பிக்க 12-ம்வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி ஆங்கிலத்தில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கில் இளநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினருக்கு மேலும் 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு மேலும் 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இதற்கான போட்டி தேர்வு புதுச்சேரி பிராந்தியத்தில் மே இறுதியில் நடைபெறும். ஏற்கெனவே இதுதொடர்பாக 2016, 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்போது விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்க வேண்டாம். மேற் குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள் https://dpar.py.gov.in என்ற இணை யதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து உரிய சான்றிழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் "அரசு சார்பு செயலர் (டிபி & ஏஆர்), பணியா ளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத் தத்துறை (பணியாளர் பிரிவு), தலைமை செயலகம்" என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இத் தகவலை புதுச்சேரி அரசுப்பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பணியாளர் பிரிவு) சார்பு செயலர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். அதிகார பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் காண இங்கே கிளிக் செய்யுங்கள் .

Live Updates

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!