தொடர் முயற்சியால் தோல்வியும் தோற்றுப்போகும்.,,,, முயற்சி செய்....!

Self Confidence in Tamil - வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு முதல்படி என எளிதாக எடுத்துக்கொள்ளுங்க...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடர் முயற்சியால் தோல்வியும் தோற்றுப்போகும்.,,,, முயற்சி செய்....!
X

வேகமாக ஓடும் குதிரையைப்போல் நாமும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் வெற்றியை நோக்கி....

selfconfidence series ..manase..manase...12


selfconfidence series ..manase..manase...12

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருமே வாழ்வில் தொடர்ந்து முயற்சி செய்பவர்கள்தாம். அவர்களுடைய முயற்சியில் வெற்றியும், தோல்வியும் அடங்கும். உடனடியாக வெற்றிக்கனியை யாரும் எளிதில் பறி்த்துவிட முடியாது. காரணம் வெற்றி என்பது உடனடியாக கிடைத்துவிடுவதல்ல. அதற்கு போராட வேண்டும். நம் அனைவரிடமும் போராடும் குணம் இருந்தால்தான் வெற்றி கூட சாத்தியமாகும். இல்லாவிட்டால் தோல்விதான்.

ஆர்வம் அவசியம் தேவை

எந்த ஒரு செயலாக இருந்தாலும் முதலில் ஆர்வம் என்பது நமக்கு இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாவிட்டால் இந்த உலகில் எந்த ஒரு செயல்பாடும் சிறக்காது. ஒரு சினிமா நல்ல வெற்றிப்படமாக ஓடுகிறது என்றால் அதில் டைரக்டரில் ஆரம்பித்து லைட் பாய் வரை அனைவரின் ஒத்துழைப்பும் முயற்சியும்தான் காரணம். அதுபோல் சமையல் சிறக்க வேண்டும் என்றால் செய்பவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இருந்தால் போதும் அது எதுவாக இருந்தாலும் ரிசல்ட் வெற்றி தான். ஏன்? படிப்பு கூட அப்படித்தான். ஆர்வம் இருந்தால்தான் உங்களால் படிக்க முடியும். அப்பா சொன்னார் அம்மாசொன்னார் உறவினர் சொன்னார்கள் என நீங்கள் விருப்பம் இல்லாமல் ஏதாவது கோர்ஸில் சேர்ந்தீர்களானால் நிச்சயம் உங்களால் படிக்க முடியாது? காரணம் என்ன தெரியுமா? உங்களுக்கு அந்த படிப்பில் ஆர்வம் இல்லாமல் எப்படி படிக்க முடியும்? ஆர்வம் என்பது மனசோடு ஒன்றிப் போனதுங்க..ஆர்வம் இல்லாவிட்டால் செயல்கள் சிறக்க வாய்ப்பில்லை.

selfconfidence series ..manase..manase...12


selfconfidence series ..manase..manase...12

லட்சியம் வேண்டும்

மனித வாழ்க்கை என்பது மகத்தானதுங்க.. அதாவது ஏதோ பிறந்தோம் , வளர்ந்தோம்... வாழ்ந்தோம்... என்று போய்விடக்கூடாது நம் வாழ்க்கை. வெந்ததைத் தின்று வீழ்வதல்ல நம் வாழ்க்கை... சாதிக்க வேண்டும். நம் வாழ்க்கையானது ஒரு நிலையான பெயரைப் பெறும் அளவிற்கு ஏதாவது ஒரு துறையில் நாம் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தினை இக்கால இளைஞர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிருங்கள்.. உபயோகமான செயலுக்கு மட்டும் போனை பயன்படுத்துங்கள். காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இழந்த நேரத்தினை எந்த சூழ்நிலையிலும் நீங்கள் மீட்டெடுக்க முடியாது. நேரத்தின் அருமையை ரயிலை தவறவிட்டவர்களிடம் போய் கேளுங்க என்று சொல்வார்கள். அதன்படி டைம்மேனேஜ்மென்ட் என்பது வாழ்க்கைக்கு அவசியம் தேவை. அப்படி இருந்தால்தான் நம் லட்சியத்திற்கு வழி பிறக்கும். எல்லோரும் போல் வாழ்வது வாழ்க்கையே அல்ல. நம் பெயர் சொல்லும்படியான சாதனைகளை நாம் படைக்கவேண்டும். அதற்கு முதலில் உங்களுக்கு நேர்மறை சிந்தனை, ஆர்வம், தொடர் முயற்சி, தியாக மனப்பான்மை உள்ளிட்ட காரணிகள் மிக மிக அவசியம் தேவை. அதனை வளர்த்துக்கொண்டால் லட்சியம் எளிதில் வெற்றி பெறும்...

selfconfidence series ..manase..manase...12


selfconfidence series ..manase..manase...12

தொடர் முயற்சி

நாம் செய்யும் செயல்கள் எடுத்தவுடனே வெற்றியைத்தராது. தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டுகள்தான். அதற்காக நமக்கு கேவலம் அல்ல. அப்படிஎன்றால் அரசியல் கட்சி எலக்‌ஷனில் போட்டிபோடுகிறது. தோற்றுவிட்டதால் அவர்கள் கட்சி இல்லாமலா போனது? அவர்களும் எதிர்க்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற இருக்கிறார்கள் அல்லவா? அதுபோல் தோல்வி என்பது தற்காலிகம்தான். நிரந்தரம் அல்ல. வெற்றி கிடைப்பதற்கான அறிகுறி அதுதாங்க..என்ன உங்களுடைய முயற்சியில் ஏதோ சிக்கல் இருந்திருக்கலாம்? அதனால் தோல்வி. அடுத்த முறை திட்டமிட்டு முயற்சி செய்தால் வெற்றிக்கனியை நீங்கள் எளிதாக பெற்றுவிடலாம்.தோல்வியடைந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினையும் நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வி நமக்கான பாடம்.

selfconfidence series ..manase..manase...12


selfconfidence series ..manase..manase...12

இந்த விஷயம் அனைத்தும் அரசு போட்டித்தேர்வுகள் மற்றும் ஐஏஎஸ் போன்ற தேர்வுகளை எழுதுவோருக்கு பொருந்தும். முதன் முதலாக எழுதும்போது உங்களுக்கே கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும் . ஒன்றுமே புரியாது. முதல் தேர்வில் எல்லோருமே வெற்றி பெறுவதில்லை. பல முறை முயற்சித்துத் தான் பலரும் ஐஏஎஸ் தேர்வில்கூட தேர்ச்சி பெறுகின்றனர். இந்த விஷயம் அவர்கள் அளிக்கும் பேட்டியிலேயே குறிப்பிடுவார்கள். அதாவது அவர்கள் இந்த தேர்ச்சிக்காக கடந்து வந்த பாதை என்று சொல்லும்போது இதனை சொல்வார்கள்.அதுபோல் தொடர் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். அதுதான் நாம் தலைப்பில் சொன்னது போல் தொடர் தோல்விகள் கூட ஒருநாள் நம்மிடம் தோற்றுபோகும் என்றால் என்ன அர்த்தம்? நிச்சயம் தொடர்ந்து முயற்சித்தீர்கள் என்றால் வெற்றி நிச்சயம் ...வெற்றி நிச்சயம்... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.. உங்கள் லட்சியத்தை வெல்லுங்க...

(இன்னும் வளரும்..)அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 9:34 AM GMT

Related News