மனசே....மனசே.... தன்னம்பிக்கைத் தொடர்-3 "காலம் பொன் போன்றது"

About Self Confidence- காலத்தை இழந்தால் மீண்டும் கிடைக்காது. எனவே 24 மணி நேரத்தை திட்டமிட்டுச் செலவிடுங்கள். அர்த்த முள்ள செயலுக்கு மட்டும் நேரத்தை செலவிடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தானாக கிடைக்கும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மனசே....மனசே.... தன்னம்பிக்கைத் தொடர்-3 காலம் பொன் போன்றது
X

About Self Confidence- இறைவனின் படைப்பில் மனித பிறவி என்பது மகத்தானது. மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களுக்கு மட்டுமே ஆறறிவினை படைத்துள்ளான். மேலும் மனிதர்களுக்கு மட்டும் பேச்சு ஆற்றலையும் அளித்துள்ளான். அந்த வகையில் நாம் அனைவரும் இறைவனுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும்.

அந்த பேச்சாற்றலையும் நாம் இடமறிந்து காலமறிந்து பேச வேண்டும். அதோடு சுற்றுப்புறத்தில் யார் உள்ளனர் என்பதையும் பார்த்து பேச வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் நாம் பேசும் பேச்சானது மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வண்ணம் இனிமையாக பேச வேண்டும். அதுவும் கால, நேரத்திற்கு தகுந்தவாறு பேசுதல்தான் நலம் பயக்கும்.

காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தினை ஒவ்வொருவரும் அவரவர்களின் வேலைகளுக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துவர். ஒரு சிலருக்கு அந்த 24 மணிநேரமே போதாதவகையில் அவருடைய வேலைகள்இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ எப்படி இந்த 24 மணிநேரத்தினை கழிக்க போகிறோம் என்ற நிலையில் இருப்பார்கள். வேலை இருப்பவர்களுக்கு நேரமிருக்காது. நேரமிருப்பவர்களுக்கு வேலை இருக்காது. இதுவே வாழ்க்கை.


இழந்தால் மீட்க முடியாது

எதை இழந்தாலும் மீ்ட்டு விடலாம்.ஆனால் காலத்தினை, நேரத்தினை இழந்துவிட்டால் அதனை யாராலும் மீட்கமுடியாது. வருடத்தின் 365 நாட்களுமே நமக்கு முக்கியமான நாட்கள்தான். ஒரு நிமிஷ நேர தாமதத்தால் ட்ரெயினை இழந்தவர்கள் இந்த நாட்டில் எத்தனையோ பேர்இருப்பார்கள். அவர்களுக்கு நேரத்தினுடைய அருமை அப்போதுதான் புரியும். அதுபோல் மிக வேகமாக ஓடும் ஓட்டபந்தய வீரரை கேட்டால் அவரும் தாமதத்தால் வெற்றியை இழந்ததாக சொல்வார். அதுபோல் ஒரு நிமிடம் கூட நம் வெற்றியை இழக்க காரணமாக இருக்கிறது என்றால் நேரத்தின் அருமையானது நம் அனைவருக்கும் முக்கியந்தானே. அதை இக்கால இளைய தலைமுறையினர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நேரத்தை விழுங்கும் ஸ்மார்ட் போன்

உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம். ஆக எந்தவொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பிலும் நாம் நம்முடைய சாதக, பாதக அம்சத்தினை தேர்ந்தெடுத்து அதற்கேற்றாற்போல் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும். முன்பெல்லாம் டெலிபோன், தந்தி, உள்ளிட்டவைகளினால்தான் நாட்டில் தொலைத்தொடர்பு நடந்தது. இன்று வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளிடம் கூட நேரில் பேசுவது போல் வீடியோ காலில் பேசுகிறோம். எவ்வளவு முன்னேற்றம்?. இதுபோல் சாதகமான அம்சங்களுக்கு ஸ்மார்ட்போன் ஓகே தான். அதுவே பாதக அம்சங்களான வீடியோகேம், ஆன்லைன் ரம்மி, மேலும் தேவையில்லாத விஷயங்களை பார்க்க நாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் நம் குற்றமே.

இக்கால இளைய தலைமுறையினரை பாருங்கள்.நாமெல்லாம்அந்த காலத்தில் காலை எழுந்தவுடன் பல்லை தேய்ப்போம். ஆனால் இக்கால இளையோர் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை செல்லைத் தான் தேய்க்கின்றனர். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் அவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்குவந்துவிட்டனர். இது முற்றிலும் தவறான செயலாகும். நேரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. இழந்த நேரத்தினை மீட்டெடுக்க முடியாது. ஸ்மார்ட்போனில் ஆர்வம் காட்டும் பல மாணவ, மாணவியர் தங்களுடைய படிப்பில் ஆர்வம் குறைந்து மதிப்பெண்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். என்னதான் பெற்றோர்கள்இருந்தாலும் அவர்கள் அனைத்து நேரங்களிலும் கூட இருப்பது இல்லை . இருந்தாலும் எல்லாவற்றையும் அவர்களால் கண்காணிக்க முடியாது. பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையில் அவர்கள் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். ஆனால் நிலைமையோ வேறு மாதிரி ஆகிவிடுகிறது. ஆனபின்புதான் பெற்றோர்களுக்கும் தெரிகிறது என்ன செய்ய.

காலம் பொன் போன்றது

இந்த வார்த்தையின் வலிமை எதில் அடங்கியுள்ளது தெரியுமா?பொன்- எப்படி தங்கத்துக்கு தரணி உள்ளவரை மதிப்போ அதுபோலவே நேரத்திற்கும். இவ்வுலகம் சுழலும் வரை காலம் நேரம் என்பதும் நிரந்தரமாகவே இருக்கும். தங்கத்தினை விட காலத்திற்கு மதிப்பு அதிகம். எனவே முடிந்தவரை யாராக இருந்தாலும் தேவையில்லாமல் நேரத்தினை வீணாக்காதீர்கள். நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பயன்தரக்கூடியதாக இருக்கவேண்டும் என மனதளவில் நினையுங்கள். அப்புறம் பாருங்கள். உங்கள் முன்னேற்றத்தினை. ஆனால் நடப்பது என்ன? இக்கால இளையதலைமுறையினர் பெற்றோர் படிக்க வைத்துவிட்டால் அதற்கு பிறகு அவர்கள் முயற்சிப்பதாக தெரிவதில்லை. முயற்சி இல்லாவிட்டால் முன்னேற்றம் இருக்காது. அதுபோலவே காலநேரத்தினை வீணடித்து விட்டால் திரும்ப கிடைக்காது என்ற தாரக மந்திரத்தினை தினந்தோறும் மனதளவில் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளேயே மாற்றம் நிகழும்..

காலத்தை கட்டிப்போட முடியாது. விழலுக்கு பாய்ச்சிய நீர் போல் உங்கள் நேரத்தை செல்போனில் தொலைக்காதீர்கள். அது உங்கள் எதிர்காலத்தை உண்டு செரிக்கும் அரக்கன். காலத்தை தொலைத்துவிடாதீர்கள். மீண்டும் பெறமுடியாத வரம், நேரம். அதன் மதிப்புணர்ந்துதான் காலம் பொன் போன்றது என கூறப்பட்டது.

(இன்னும் வளரும்)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 7:25 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...