மனசே...மனசே...தன்னம்பி்க்கைத்தொடர் -25 இலக்கில்லாத வாழ்க்கை கூரையில்லாத வீடு போன்றது..!

மனசே...மனசே...தன்னம்பி்க்கைத்தொடர் -25  இலக்கில்லாத  வாழ்க்கை  கூரையில்லாத வீடு போன்றது..!
X

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்...முயற்சியானது எப்போதும் வெற்றியைத் தரும் (கோப்பு படம்)

self confident tamil motivational article-மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் .அந்த வகையில் மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாம் செய்யும் செயல்களும் சிறக்கும்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவர்கள். வெந்ததைத்தின்று வாழ்ந்து மடிவது மட்டுமே வாழ்க்கை இல்லை. நாம் இப் பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் வேண்டும்.அந்த அடையாளம் நாம் சாதித்த சாதனைகளாக இருக்கவேண்டும். பெயர்சொன்னால் தரம் விளங்கும் என்பதைப்போல் நம் பெயர் சொன்னாலே நாம் மற்றவர்களுக்கு , சமுதாயத்திற்கு செய்த சேவைகள் கண் முன் வரவேண்டும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் சாதித்திருக்கவேண்டும்...அதுதான் வாழ்க்கை

self confident tamil motivational article


self confident tamil motivational article

இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்

பள்ளி, கல்லுாரிப் பருவத்தில் படிக்கும் காலத்திலேயே ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தன் வாழ்க்கை இலட்சியத்தின் இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கானது நீண்ட கால கனவாக இருக்க வேண்டும். நம் இந்திய நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னது போல் கனவு காணுங்கள்.

அது சாதிக்க வேண்டிய கனவாக இருக்க வேண்டும். கனவு என்பது கானல் நீராக போய்விடக்கூடாது. அது லட்சியக்கனவாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்தில் பயணம் செய்யும் அனைவருக்குமே ஒரு குறிக்கோள், இலக்கு இருக் கவேண்டும். எதுவும் இல்லாமல் பயணம் செய்தால் நாம் போகுமிடம் நமக்கே ஒரு சில நேரங்களில் தெரியாது. ஆனால் லட்சியப்பாதையில் நீங்கள் பயணம் செய்யும்போது நாம் சேரும் இடம் நமக்கு தெரிந்து இருக்கும்...தெரிய வரும்... அதுதான் உண்மையான பயணம்.. எனவே இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்...

self confident tamil motivational article


self confident tamil motivational article

எதிர்காலம் எப்போதும் நிச்சயமற்றது, ஆனால் நாம் பாடுபடுவதற்கான இலக்குகள் இருக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. எதிர்காலத்திற்கான இலக்குகளை அமைப்பது நமது வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பது போலாகும்.ஒவ்வொருவருமே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கி பயணப்பட வேண்டும். திட்டமிடுதல்,இலக்கு நிர்ணயிக்காத வாழ்க்கை ஆகியவை கூரையில்லாத வீடுகளில் இருப்பது போல் ஆகும்.எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

திட்டமிடு....செயலாற்று....

எந்தவொரு காரியமானாலும் அதனை முடிக்க நாம் முன் கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது வெற்றியில் முடியும். திட்டமிடாமல் செயலாற்றும்எந்தவொரு செயலும் ஜெயிப்பதில்லை.. குழப்பத்தினைத்தான் ஏற்படுத்தும். ஏங்க..சாதாரணமாக அருகிலுள்ள ஊருக்கு செல்வதாக இருந்தாலும் புறப்படும் நேரம் அன்றைய செயல்கள், உள்ளிட்டவற்றை முன்னரே திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். இதுபோலவே அனைத்து செயல்களுக்கும் திட்டமிடல் அவசியம் தேவை...

self confident tamil motivational article


self confident tamil motivational article

பள்ளி, கல்லுாரி படிப்பு முடித்தபின் பெரும்பாலான மாணவ, மாணவிகள் எந்தவொரு குறிக்கோளும்இன்றி காலத்தினை நேரத்தினை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும்தவறான செயலாகும். படிக்கும் காலத்திலேயே உங்களுக்குள் திட்டமிடல், இலக்கு போன்றவைகளை நிர்ணயித்து இருந்தால் இதுபோல் நிகழாது. இலட்சியத்தை நோக்கி பயணித்திருப்பீர்கள். ஆனால் எந்தவொரு திட்டமிடலும் இல்லாத கல்வியானது சிறக்காது. நீங்கள் அன்றாடம் படிக்கும் பாடத்திற்கு கூட திட்டமிட்டால்தான் உரிய பாடத்திட்டத்தினை உங்களால் படித்து முடிக்க முடியும். உங்கள் நேரத்தினை விழுங்க பல தொழில்நுட்ப கருவிகள் காத்திருக்கிறது. உங்கள் மனதை அலைபாய விடாமல் இலட்சியத்தினை நோக்கி இன்றே பயணம் செய்ய புறப்படுங்கள்... இலட்சியத்தினை மனதில் கொண்டு உங்கள் எதிர்காலத்தினை வளமாக்க திட்டமிடுங்கள்..நிச்சயம் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள்...

உங்கள் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடுவது..?

  • உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் இறுதி இலக்குகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
  • குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் தொழில் அல்லது இலக்குகளை மதிப்பாய்வு செய்யுங்கள்.
  • அதற்கான உங்கள் கால அளவை நிர்ணயம் செய்யுங்கள்.
  • உங்கள் இலக்குகளையும் திட்டங்களையும் வரிசைப்படுத்தி எழுதுங்கள்
  • உங்கள் இலக்குகளை நோக்கி தீவிரமாக செயல்படுங்கள்.

இலக்கு இல்லாதவன் வாழ்க்கை கூரையில்லா வீட்டில் வசிப்பது போன்றது..!

(இன்னும் வளரும்....)

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!