ஆர்வம் இல்லாவிட்டால் செயல்கள் சிறக்காது..! ஆர்வமாக இருங்க... வெற்றிகளைத் தொடுங்க..

self confident tamil motivational article- வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆர்வத்தோடு அனைத்து செயல்களிலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கனியானது உங்கள் காலடியில் விழும்...இல்லாவிட்டால்..... என்ன ஆகும்? படிச்சு பாருங்க....

HIGHLIGHTS

ஆர்வம் இல்லாவிட்டால் செயல்கள் சிறக்காது..! ஆர்வமாக இருங்க... வெற்றிகளைத் தொடுங்க..
X

self confident tamil motivational article

வாழ்க்கையில் நாம் எந்த செயலைச் செய்தாலும் அதில் ஆர்வம் இல்லாவிட்டால் அந்தச் செயலானது சிறக்காது. அந்த வகையில் ஆர்வத்துடன் செய்யப்படக்கூடிய செயல்கள் எப்போதும் வெற்றியைத் தான் தரும். ஆர்வம் இல்லாமல் செய்யக்கூடிய செயல்கள் அத்தகைய சிறப்பினைப் பெறுவதில்லை. இதனை நாம் அனைவரும் அனுபவத்தின்மூலமே உணரலாம்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

இதற்கு உதாரணமாக பல விஷயங்கள் குறித்து நாம் சொல்லலாம். ஏங்க...அவ்வளவு துாரம் நம் வீடுகளில் சமைக்கும் பெண்கள் முழு மனதுடன் சமையலைச் செய்யாவிட்டால் அந்த சமையலே அதனைக் காட்டிக்கொடுத்துவிடும் என்றால் பாருங்களேன்.. காரணம் ஆர்வம் இருந்தால்தான்சுவையும் கூடும்....என்பதிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதேபோல்தான் நம் வாழ்க்கையில் எத்தனையோ வேலைகளை பலர் செய்கின்றனர் . அது எந்த வேலையாக இருந்தாலும் அவர்கள் ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.ஒரு ஓவியர் ஒரு ஓவியம் வரைவதாக வைத்துக்கொள்வோம். அவர் மனசு ஈடுபாட்டோடு அந்த ஓவியத்தினை வரைந்தால் தான் அதுமிளிறும்.இல்லாவிட்டால் அந்த ஓவியம் சொதப்பிவிடும். இதேபோல்தான் அனைத்து வேலைகளிலும் அந்த வேலைகளில் ஈடுபடும் நபர் தன் விருப்பத்தோடு ஆர்வத்தோடு செய்ய வேண்டும் .ஆர்வத்தோடு செய்யாத செயல்களில் குழப்பங்கள் அதிகம் ஏற்படுவது உறுதி.

self confident tamil motivational article


self confident tamil motivational article

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு:

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பில் ஆர்வம் காட்டாவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெறுவதே கடினமாகிவிடுகிறது. அந்த காலத்தில் பள்ளியில் சரியாக படிக்காத மாணவர்கள் பாதியில் இடை நிறுத்தத்தைப் பெற்றோர்களே செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில்குறைந்த பட்ச கல்வித்தகுதியான பிளஸ்2 வரையாவது ஒருவர் படித்தால்தான் இந்த சமூகத்தில் அவர் பிரச்னையின்றி வாழ முடியும் என்ற நிலை உள்ளது. காரணம் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க சென்றால் பெற்றோர்கள் என்ன படித்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளை ஒரு சில பள்ளிகள் தேர்ந்தெடுப்பதிலும் சுணக்கம் காட்டுகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆர்வத்தோடு ஒவ்வொருவரும் நன்கு படித்தால் தான் எதிர்காலமானது சிறக்கும்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

அதுவும் தேர்வு நேரத்தில்படிப்பவர்கள் வழக்கத்தினை விட கூடுதல் ஆர்வம் செலுத்திப் படிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். காரணம் போட்டி மிகுந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இழந்த நேரத்தினையும் காலத்தினையும் நம்மால் எப்போதும் திரும்ப பெற முடியாது. ஒரே ஒரு முறைதான் நாம் எந்த தேர்வையும் எழுதப்போகிறோம். அதற்கு நாம்கூடுதல் ஆர்வத்தினைச் செலுத்தினால் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவது உறுதி என்ற நினைப்பில் படித்தோமானால் நல்ல மதிப்பெண்கள்தான் நிச்சயம் கிடைக்கும்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

முயற்சி, தன்னம்பிக்கை, இடைவிடாத ஆர்வம் இவை இருந்தால் போதும் எந்த செயலுமே வெற்றியடைந்துவிடும். இம்மூன்று காரணிகளையும் யார் திறம்பட பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல் வெற்றியையே தரும்.இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த மூன்று காரணிகளின் வீச்சு ஏதாவது ஒன்றில் குறைந்தால் கூட சறுக்கல் என்பது நிச்சயம். எனவே இந்தமூன்று காரணிகளையும் திறம்பட செயலாற்றி உங்கள் செயல்களை வெற்றியடையச் செய்யுங்கள் .

போட்டித்தேர்வு எழுதுவோருக்கு

கல்லுாரி படிப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் காலத்தின் அருமையைக் கருதி ஒருமணிநேரம் கூட வீணடிக்க கூடாது. தற்போது நம் கைகளில் தவழும் ஆயுதமான ஸ்மார்ட்போனால் அதிக நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றாற் போல் தீமைகளும் உண்டு. நம் மனக்கட்டுப்போடு இருப்போமானால் நன்மைகளை மட்டும் அதிலிருந்து அறுவடை செய்துகொள்ளலாம். இதற்கெல்லாம் யாரும் கண்காணிக்க முடியாது.நமக்கு நாமே பாதுகாப்பு என்ற கோட்பாட்டின் படி செயல்பட்டாக வேண்டிய நிலைதான்.

self confident tamil motivational article


self confident tamil motivational article

எனவே கையடக்கத்தில் உலக நிகழ்வுகளைக் காணும் வசதி இந்த தலைமுறையினருக்கு கிடைத்துள்ளதுபெரும்பாக்கியமே. அதனை அவர்கள் நல்லவிதமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது அவரவர்களுடைய பொறுப்பு. நீங்கள் வழிமாறிப்போனீர்கள் ஆ னால் கஷ்டப்படுவது நீங்கள்தான். உங்களைச் சார்ந்தவர்கள் நிச்சயம் அல்ல.

self confident tamil motivational article


self confident tamil motivational article

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களும் நீங்கள் அப்ளை செய்யக்கூடிய தேர்வுக்கு ஆர்வத்துடன் வினாக்களை தயார்செய்து படிக்க வேண்டும். கருங்கல் கூட உளியால் படாத அடிகள் பட்டுத்தான் அழகான சிலையாக உருவெடுக்கிறது. அதைப்போல் நாம் கஷ்டப்பட்டால்தான் நல்ல பலனை அதாவது தேர்வில் தேர்ச்சி என்ற பலனை அடைய முடியும். அதற்கு முதலில் உங்களுக்கு வேண்டியது தன்னம்பிக்கை, பிறகு ஆர்வம் . ஆர்வம் இல்லாவிட்டால் கடுகளவு கூட வெற்றி கிடைக்காது. ஏன்? உங்க மனசு படிப்பதில் செல்லாது. இதனால்தான் நமக்கு தோல்வி வருகிறது. ஆர்வத்தோடு நிச்சயம் படிச்சு பாருங்க...உங்களை யாருமே ஜெயிச்சுக்க முடியாது.. எனவே முதன் முதலில் உங்களை நீங்களே நம்புங்கள்... நாளையும் உங்கள் வசப்படும்...

ஆர்வத்தோடு செய்யும் செயல்களே சிறக்கும்....

ஆர்வமில்லா செயல்கள் நம்மை விட்டு பறக்கும்...

(இன்னும் வளரும்...)

self confident tamil motivational articleUpdated On: 13 Dec 2022 4:41 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...