self confident and motivational tamil article- திட்டமிடும் செயல்களே வெற்றி பெறும்..! பிளான் பண்ணுங்க.... சக்ஸஸ் நிச்சயம்..!

self confident and motivational tamil article-  திட்டமிடும் செயல்களே வெற்றி பெறும்..!  பிளான் பண்ணுங்க.... சக்ஸஸ் நிச்சயம்..!
X

தன்னம்பிக்கை வழிகாட்டி கட்டுரை (கோப்பு படம்)

Self Confidence Motivational Quotes in Tamil - வாழ்க்கையில் எந்தவொருபிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும் என்றால் திட்டமிடல் என்பது அவசியம் தேவை. இல்லாவிட்டால் குழப்பந்தான்.

Self Confidence Motivational Quotes in Tamil -


selfconfidence series....manase...manase....18

மனிதனின் வாழ்க்கையில் எல்லாசெயல்களுமே வெற்றி பெறுகிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வாழ்வில் எப்படி இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறதோ அதேபோல்தான் வெற்றியும் , தோல்வியும் மாறி மாறித்தான் வரும்.தொடர் வெற்றிகள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். எந்த வெற்றியாக இருந்தாலும் நாம் திட்டமிட்டு செயலாற்றினால்தான் கிட்டும். திட்டமிடாத செயல்கள் எப்போதும் வெற்றியைத் தருவதில்லை. வெற்றி என்பது சாதாரணமாக கிடைத்துவிடாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இன்று வாழ்வில் முன்னேறியவர்கள் அனைவருமே கடந்த காலத்தில் கடும் உழைப்பை மேற்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

மாணவ,மாணவிகளுக்கு:

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் எனில் கடுமையாக உழைக்கவேண்டும். அப்படி உழைத்தால்தான் நீங்கள் மேற்கொண்ட இலக்கினை அடைய முடியும். வகுப்பறையில் நடத்தும் பாடங்களை அன்றன்றே படித்து முடித்துவிட வேண்டும். அப்போதுதான் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தியது உங்களுடைய நினைவிற்கு வரும்.எந்த சந்தேகமும் வராது. ஆனால் ஒரு நாள் தள்ளி படித்தாலும் ஏதாவது ஒரு சந்தேகம் வந்துவிடும். மறு நாள் படித்தாலே இந்த நிலை என்றால் எல்லாவற்றையும் தேக்கிவைத்துக்கொண்டு கடைசி நேரத்தில் படித்தால் உங்களுக்கு பெரும் குழப்பம்தான் ஏற்படும்.

எனவே வெற்றி பெற வேண்டும் என்றால் அன்றன்று நடத்தும் பாடங்களை நீங்கள் அன்றே படித்தீர்களானால் வெற்றி என்பது உங்கள் காலடியில் இருப்பதுபோல். மனதில் பயந்து கொண்டு போய் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது. கடைசி நேரத்தில் படிக்கும்போது எதை எதை படிப்பது? எதை எதை விடுவது? என்ற குழப்பத்தில் எதுவுமே மனதில் பதியாது. அதேபோல் இரவில் 10 மணிக்குமேல் படிக்கவே கூடாது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து படித்து பாருங்கள்... உங்களுக்கு எளிதில் மனதில் பதியும்.ஆகவே அதுவும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் உங்களுக்கான பாடத்தினை தினமும் படிப்பதற்கு தேவையான கால அட்டவணை போட்டுக்கொள்ள வேண்டும். இதுபோல் திட்டமிட்டு படித்தீர்களானால் நீங்கள் மனதில் நினைத்த மதிப்பெண் நிச்சயம் பெறுவீர்கள். திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படித்தால் மதிப்பெண் வராது... நினைவில் கொள்ளுங்கள்....

selfconfidence series....manase...manase....18


selfconfidence series....manase...manase....18

போட்டித்தேர்வு எழுதுவோருக்கு:

கல்லுாரியில் படித்து முடித்தவுடன் பல மாணவர்கள் வேலைக்கு செல்ல முயற்சிக்காமல் நேரத்தினை வீணாக்குகின்றனர். பருவத்தே பயிர் செய் என்பது போல் வயதிருக்கும்போதே நல்ல வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற லட்சியத்தினை இக்காலஇளையோர்கள் மனதில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் படிக்கும் கல்லுாரியில் கேம்பஸ் வருகிறதோ இல்லையோ உங்களுக்கான இலட்சியத்தினை நீங்கள் படிக்கும் காலத்திலேயே நிர்ணயம் செய்துகொண்டு அதனை அடைய கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கும் திட்டமிடல் என்பது அவசியம். எந்த தேர்வு எழுதப்போகிறோம்? அதற்காக படிக்க வேண்டிய பாடங்கள் என்னென்ன? எப்படி படிப்பது? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்? நாமாகவே தேர்வு வைத்து அதனை எழுதிப்பார்க்கவேண்டும்? என்பன போன்ற கருத்துகளை முன்வைத்து அதற்காக முன்திட்டமிடல் என்பது அவசியம்.. இதுபோல் திட்டமிட்டு போட்டித்தேர்வுக்காக படித்தீர்கள் என்றால் முதல் தேர்விலேயே நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

selfconfidence series....manase...manase....18


selfconfidence series....manase...manase....18

அநாவசியமாக ஸ்மார்ட் போனில் கண்ட கண்ட விஷயங்களைப் பார்த்து நேரத்தினை வீணாக்காதீர்கள். வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் மீண்டும் கிடைக்கவே கிடைக்காது. முதலில் நம் உயிர் போய்விட்டால் கிடைக்காது. இரண்டாவது நேரம் இழந்த நேரத்தினை திரும்ப பெற முடியாது.மூன்றாவதாக நாம் பேசும் வார்த்தைகள் ... இதனைத்திரும்ப பெற முடியாது.கோபத்தில் யாரையாவது பேசிவிடுகிறோம்.. அந்த வார்த்தைகளால் அவர்களுக்கு மனசு வலித்திருக்கலாம்.. ஆனால் நம்மால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்க முடியுமா? எனவே நேரத்தினை உணர்ந்து திட்டமிட்டு படியுங்கள்.. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்...



selfconfidence series....manase...manase....18

இதுபோல் நம் வாழ்க்கையில் எந்த செயலாக இருந்தாலும் நாம் முன்திட்டமிடாவிட்டால் அது சிறக்காது. உதாரணத்திற்கு நம் வீட்டில்திருமணம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக நாம் ஒரு மாதம் முன்பிருந்தே அனைவரும் உழைக்கிறோம். சும்மா ஆளாளுக்கு வேலை செய்து பிரயோஜனமில்லை. ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் ஒருவரை நியமித்து அதனை அவரையே முழுமையாக பார்க்க சொல்லி விட வேண்டும். எவ்வளவு விஷயங்கள் உள்ளது. எல்லாவற்றையும் ஒரே நபர் பார்த்தால் மறதியால் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே முன் திட்டமிட்டு அந்த அந்த வேலைகளைப் பிரித்து ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்து பாருங்கள்.. அது சிக்கல் இல்லாமல் முடிந்துவிடும். எனவே எந்தவொரு விஷயத்திற்கும் முன்திட்டமிடல் இல்லாவிட்டால்குழப்பங்கள்தான் மிஞ்சும்... அந்த வகையில் எல்லா செயல்பாடுகளுக்கும் நாம் முன்திட்டமிட்டால்தான் அது சக்ஸஸ் ஆகும்.இல்லாவிட்டால் கஷ்டமோ...கஷ்டமாகிவிடும்... எப்படி ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால் ரிசர்வ் செய்கிறோமோ அதுபோல்தான் வாழ்க்கையின் அத்தனை நிகழ்வுகளும்... முன்னெச்செரிக்கையாக திட்டமிட்டால் எல்லா செயல்களுமே வெற்றிதான் போங்க...

  • திட்டமிடாத செயல்கள் வெற்றியைத் தரவே தராது....
  • திட்டமிடாத வாழ்க்கை கூரை இல்லாத வீட்டினைப் போன்றது... நினைவிலிருக்கட்டும்....
  • எந்த செயலாக இருந்தாலும் முன்திட்டமிடுங்கள்...
  • நிச்சயம் வெற்றிக்கனியைத்தான் சுவைப்பீர்கள்...

(இன்னும் வளரும்)



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story