மனசே...மனசே...தன்னம்பிக்கைத்தொடர் -24 "ஆசையே துன்பத்துக்கு காரணம்..! அதிகமா ஆசைப்படாதீங்க..!"
புத்தரின் வரிகள் 'ஆசையே துன்பத்துக்கு காரணம்' (கோப்பு படம்)
self conident motivational article -24
மனித வாழ்க்கை என்பது மகத்தானது. ஆனால் இந்த மகத்தான வாழ்க்கையினை ஒரு சில பேர் அவர்களுடைய அல்ப ஆசையின் காரணமாக விபரீத வாழ்க்கையாக மாற்றிக்கொள்கின்றனர்.''ஆசையே துன்பத்துக்கு காரணம்'' என்ற புத்தரின் போதனையை ஒரு சிலர் அலட்சியப்படுத்துவதால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மனிதர்களாக பிறந்த நமக்கு வாழ்க்கை முழுவதுமே இன்பமும் துன்பமும்தான் மாறி மாறி வரும். அதாவது எப்படி வெயிலும் மழையும் மாறி மாறி வருகிறதோ அதேபோல் இன்பமும் துன்பமும் மாறி வருவதுதான் வாழ்க்கை.வாழ்க்கை முழுவதும் இன்பமாக இருந்துவிட்டாலோ அல்லது துன்பமாக இருந்துவிட்டாலோ போரடித்துவிடும். ஆகவே தான்இயற்கையே இந்த மாற்றத்தினைக் கொண்டுள்ளது.
self conident motivational article
self conident motivational article
இருப்பதைக்கொண்டு எளிமையாக வாழ்பவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்னைகளும் வருவதில்லை. ஆனால் அகலக்கால் வைப்பவர்கள் அதாவது வருமானத்துக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்பவர்களுக்குதான் இந்த சிக்கலே .
அதுக்காகத்தான் அக்காலத்தில் ''வரவறியாமல் செலவினமென்றால் நிலவரமெல்லாம் கலவரமாகிவிடும்'' என சொல்லிவிட்டு சென்றுள்ளனர். வரவுக்கு மீறிய செலவுகளால் என்றைக்கும் ஆபத்துதான்.
அதாவது சம்பாதிக்க துவங்கிய காலத்தில் இருந்து தன்னுடைய வருமானத்தில் 10 சதவீத பணத்தினை சேமிப்பது நல்லது.இதுபோன்ற சேமிப்புகள் நமக்கு இறுதிக்காலத்தில் கை கொடுக்கும். ஆனால் நடப்பதென்ன? .. ஆசைகள்தான் நம்மை இதுபோன்ற துன்பத்தில் தள்ளுகின்றன.
self conident motivational article
self conident motivational article
ஆம். உண்மைதான் மனிதர்களாக பிறந்தவர்களுக்கு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற ஆசைகள் இருப்பது உண்மைதான். இதில் மண்ணாசையால்தான் பல குடும்பங்களில் பிரச்னைகள் வந்து ஒன்றாக இருந்த குடும்பங்கள் கூட பாகப்பிரிவினையால் பிரிந்துவிடுகின்றன. அதேபோல் பெண்ணாசை அதாவது பெண்ணுக்காக ஆசைப்பட்டு சொத்துகளை இழந்தவர்கள் ஏராளம். அதேபோல் பெண்ணுக்காக ஆசைப்பட்டு தன் இளமைக்கால வாழ்க்கையினை இழந்து தவிப்பவர்களும் இந்த நாட்டில் ஏராளம். அதாவது காதல்..காதல் என்ற காதல் கடைசியில் சக்ஸஸ் ஆகாமல் போய் பிரம்மச்சாரியாகவே காலத்தினைக் கழிப்பது அந்த காதலின் கொடுமைகளே....
பொன்னாசை என்பது அனைவருக்கும் உள்ளதுதான். நம்மிடம் பணம் இருந்தால் இதனை வாங்கிக்கொள்ளலாம். இந்த பொன்னாசையினால் பலர் கொலைக்குற்றவாளியாகியும் உள்ளனர் . மேலும் ரோடுகளில் நடந்துசெல்லும் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் எதற்காக நடக்கின்றன. பொன்னுக்கு உள்ள பணமதிப்பால் தான் நடக்கின்றன. ஆக கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்த 3 வகை ஆசைகளுமே நமக்கு அளவோடுதான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்.
self conident motivational article
self conident ,motivational article
மனஉளைச்சல்
அதாவதுநாம் வருமானத்துக்கு மீறி கடன் பெறும்போது நமக்கு அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளே சுறுசுறுப்படைவதில்லை. காரணம் அந்த தேதியில் நாம் கட்டியாக வேண்டும் என்ற மனப்பதற்றம், மன உளைச்சல். அதுவும் ஒரு சில தனியார் கடன் தரும்நிறுவனங்கள் அதனைத்தரும்போது சிவப்பு ரத்தினக் கம்பளத்தினை விரித்து வரவேற்கும். ஆனால் திரும்ப செலுத்தும்போது சரியாக செலுத்தமுடியாவிட்டால் அந்நிறுவனம் எடுக்கும் நடவடிக்கையே வேறு விதமாக இருக்கும்.
இளைஞர்களுக்கு....
இளைஞர்கள் எத்தனையோ பேர் கல்லுாரிப்படிப்பின்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். சேர்ந்தும் வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறிவுரை என்ன தெரியுமா? .. நீங்கள் வாங்கும் சம்பளத்திற்குள் உங்கள் செலவினத்தை சுருக்கிக்கொள்ளுங்கள். 10சதவீத பணத்தினை எதிர்கால செலவுகளுக்காக கண்டிப்பாக சேமியுங்கள்..இது உங்களுக்கு பண நெருக்கடியில் பெருத்த கைக்கொடுக்கும்.
கடனுக்கு தருகிறார்கள் என வாங்கி அடுக்காதீர்கள்.. அப்படியே அது வாங்கினாலும் விதிமுறைகளை நன்கு படித்து பார்த்து அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத்தான்செய்ய வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடாதீர்கள்...அப்புறம் ஆசையே துன்பத்துக்கு காரணமாகிவிடும் என்பது நிஜம்.பல பேரிடம் விசாரித்து அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளுங்கள்... அனுபவங்கள் அதிகம் பேசும்...
self conident motivational article
self conident motivational article
நம்முடைய செயல்பாடுகள் அனைத்திற்கும் நம்மனசு தான் காரணம். மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும். வசதி இல்லாத ஏழைகளை நினைத்துபாருங்கள்..அவர்களிடம் உள்ளதை வைத்து சந்தோஷமாகத் தானே வாழ்க்கையினை நகர்த்துகின்றனர். அதுபோல் நம்மால் முடியாதா என்ன? ஏன்? நாம் மட்டும் அகலக்கால்வைத்து அவதிப்பட வேண்டும்.நாமும் எளிமையாக வாழப்பழகிக்கொள்வோமே-அதிக ஆசைப்படாமல்.... ஒன்றுமட்டும் புரிந்துகொள்ளுங்கள்...எளிமையாக வாழ்பவர்களிடம் தன்னம்பிக்கையும் ...நேர்மையும் அதிகம் உள்ளன. அதுவே ஆசைப்படுபவர்கள் அவதிப்படும்போது அவர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது.... இதுதான் நிதர்சன உண்மை...
அதிகம் ஆசைப்படாதீர்கள்... அதுவே நம் நிம்மதியைக் குலைத்துவிடும்... உஷாராக இருங்க..
(இன்னும் வளரும்..)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu