மனசே..மனசே..! தன்னம்பிக்கை தொடர் -10 'மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்'

மனசே..மனசே..! தன்னம்பிக்கை தொடர் -10  மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்
X

முயற்சியே வெற்றிக்கான முதல் படி.

Self Confidence Quotes in Tamil -ஒரு சாதனையை எட்டுவதற்கு மனது தயாராக இருந்தால் மட்டுமே முயற்சிகளை முன்னெடுக்க முடியும். மனதை தயார்படுத்துதலே முதல் பணி.

self confidence series manase...manase... series 10


self confidence series manase...manase... series 10

வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுமே நம் மனதை மையமாக வைத்தேநடக்கின்றன. மனமானது மகிழ்ச்சியுடன் புத்துணர்ச்சியோடு இருந்தால் நாள் முழுக்க அன்றைய செயல்பாடுகள் அனைத்தும் வெற்றியை தொடுகிறது.அதுவேமனம்சோர்வாக இருக்கும் பட்சத்தில் வெற்றிக்கோட்டினை தொடுவது அவ்வளவு சுலபமல்ல.

ஆகவே நம்முடைய எந்தவொரு செயல்பாட்டிற்கும் மனம் அடிப்படை காரணமாகிறது. எந்த சூழ்நிலையிலும் நம் மனம் பாதிக்காத வகையில் நம்முடைய செயல்பாடுகள் நாள்தோறும்இருக்க வேண்டும். எதிர்பாராமல்நடக்கும் நிகழ்வுகளை தவிர நாமாக எந்தவொரு விஷயத்தினையும் வரவழைத்துக்கொள்ளக்கூடாது. அதில் மிக கவனமாக இருக்கவேண்டும்.

சரிங்க .. மனம் சந்தோஷமாகவே இருக்கணும்னா என்னங்க..செய்யணும்னு கேட்கறீங்களா... நல்லா கேட்டுக்குங்க...

உங்க மனம் சந்தோஷமாக இருக்கணும்னா நம்முடைய அடிப்படை பொருளாதார நிலைமைக்கு சிக்கல் இல்லாம நீங்க பார்த்துக்கணும். உங்களுக்கே தெரியும்.. நம்மிடம் செலவுக்கு போதுமான பணம் கையில் இருக்கும்போது நம் மனம் எதைப்பற்றியும்யோசிப்பதில்லை.அதுவே இல்லாத நிலையில் மனம் பதை பதைக்கிறது... என்ன செய்யப்போகிறோம் என்று...ஆக உங்கள் பாக்கெட்டில் பணம் இருக்கும்போது மனம் ஒரு நிலையில் இருக்கும்....இல்லாத போது ஒரு நிலையில் இருக்கும்... இந்த வித்தியாசத்தினை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.. தேவைக்கேற்ற செலவினங்களை மட்டுமே செய்ய வேண்டும்.. கடன்வாங்கி செலவு செய்யக்கூடாது. இதுவே மனம் பாதிப்பதற்கான அடிப்படை காரணி.

self confidence


மாணவ, மாணவிகளுக்கு:

நம்மை பெற்றோர் கஷ்டப்பட்டு எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும் என படிக்க வைக்கிறார்கள். அதனை உணர்ந்து நாம் நன்கு படிக்க வேண்டும் என உங்கள் மனதளவில் தீர்மானத்தினை எடுங்க... அப்போதுதான் படிக்க முடியும்... ஏதோ பிறந்தோம்... படிக்க வைக்கிறாங்க.. நாமும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறோம்.. வருகிறோம்.. என இல்லாமல் ஒவ்வொருவருமே தம் எதிர்காலத்தைப்பற்றி கனவு காணுங்க... அதாவது லட்சியம், கொள்கை இல்லாவிட்டால் எந்த காரியமும் ஜெயமாகாது.


self confidence series manase...manase... series 10

அந்த வகையில் படிக்கும் மாணவ, மாணவிகளே உங்களுடைய வயதில் நீங்கள் அனைவருமே மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் உங்கள் கொள்கை, லட்சியத்தில் வெற்றி அடைய முடியும். கட்டுப்பாடு இல்லாத மனம் அலைபாயும்.. நிதானம் இருக்காது.. எனவே மனதினைக் கட்டுப்படுத்தி உங்கள் பாடத்தில் கவனத்தினை செலுத்துங்க.. உங்கள் நேரத்தினை விழுங்க வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பிரைம்டைம் என பல தொழில்நுட்ப ஆஃப்கள் வரிசை கட்டி நிற்கும்.நீங்கள் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கணும். சொல்லப்போனால் விரதம் இருக்கணும். அதுவும் 10, 11, 12 , கல்லுாரிஇறுதி ஆண்டு மாணவர்கள் அனைவருமே அவர்கள் படிக்கும்இந்த இறுதியாண்டில் எந்தவித பொழுதுபோக்கிற்கும் இடமில்லாமல்மனதை பக்குவப்படுத்திக்கொண்டு பாடத்தில் கவனத்தினை செலுத்த வேண்டும். நேரத்தினை வீணடிக்க கூடாது. உங்களுக்கெல்லாம்இந்த ஆண்டுதான் அஸ்திவாரம். அதாவது வீடு கட்டும்முன் எப்படி அஸ்திவாரம்ஸ்ட்ராங்காக போடுகிறார்களோ அதைப்போல் நீங்கள் இந்த இறுதியாண்டு படிப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால்தான் உங்கள் உயர் வகுப்பிற்கு நல்ல இடம் கிடைக்கும் என்பதை மறவாமல் மனதை கட்டுப்படுத்தி படியுங்க..

self confidence series manase...manase... series 10


self confidence

மனப்பயிற்சி:

தினந்தோறும் காலையில் அல்லது மாலையில் ஒரு அரைமணிநேரம் மட்டும் ஒதுக்கி முடிந்தவரை தியானமோ அல்லது யோக பயிற்சிகளோ செய்து வந்தீர்களானால் மனம் அமைதியுறும். உங்கள் டென்ஷன் குறையும். படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதியும். எனவே அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு அனைவருமே முயற்சி செய்யுங்க...நிச்சயம் முன்னேற்றம்உண்டு... மனமிருந்தால் மார்க்கம் உண்டு. எனவே எதற்கும் அஞ்சாமல் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்க.. திட்டமிட் டு படியுங்க...உங்க லட்சிய கனவு நிச்சயம் நிறைவேறும்..நம்பிக்கை வையுங்க...சக்ஸஸ் தான்..

ஆரோக்யஅக்கறை:

இரவில் அதிக நேரம் கண் விழித்து படிக்காமல் அதிகாலை நேரத்தில்எழுந்து படிப்பதுதான் எளிதில் மனதில் பதியும். பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவிகளே உங்கள் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த முயற்சியுங்கள்.. ஃபாஸ்ட்புட் எண்ணெயில் பொறித்த கார வகைகளை முற்றிலும் தவிருங்கள். பழவகைகளை அதிகம் எடுத்து கொள்ளுங்க.. எளிதில் ஜீரணம் ஆகும் உணவினையே சாப்பிட பழகுங்க.. ஏனெனில் இந்தஆண்டு முழுவதுமே இதனைக் கடைப்பிடிப்பது நல்லது. உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் படிப்பு பாதிக்கும்..படிப்புபாதித்தால் மனசு பாதிக்கும்.. மனசு பாதித்தால் பிரச்னை அதிகரிக்கும்... எனவே முடிந்தவரை அனைத்திலும்கவனம் செலுத்துங்க... கவனமா படியுங்க...நல்ல மதிப்பெண் எடுக்க சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்...

''மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்...'' கண்டிப்பாக...

(இன்னும் வளரும்....)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil