வாழ நினைத்தால் வாழலாம்..! வழியா இல்லை பூமியில்..!
தன்னம்பிக்கைத் தொடர்.(கோப்பு படம்)
Self Confidence Story in Tamil -மனிதர்களாக பிறந்த நமக்கு தன்னம்பிக்கை என்பது முக்கியமானதாகும். நம்பிக்கை (நம்பி... கை )வைத்தால்முடியாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்க்கை...நீங்கள் என்னவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்...
அதாவது உங்களின் மனதில் என்ன நினைக்கிறீர்களோ அதுவே நடக்கும்...நடந்து வருகிறது. மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும். நம் வாழ்வின் அனைத்து செயல்பாடுகளுமே மனதை மையமாக வைத்தே நடக்கின்றன. ஆக நம் மனம் என்னநிலையில் உள்ளதோ அதுபோல் தான் அன்றைய முழுநாள் செயல்பாடுகளும்இருக்கும்.
முன்பெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியானது அந்த அளவிற்கு முன்னேற்றம் காணாததால் அனைத்து வேலைகளுமே மனிதர்களை மனிதர்களின் உழைப்பை நம்பியே இருந்தன. ஆனால் தற்காலத்தில் தொழி்ல்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் அதீத வளர்ச்சியடைந்துள்ளோம். கையடக்கத்தில் உலகில் நடக்கும் அனைத்து செய்திகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இவையனைத்தும் ஒரு புறம் சாதகம் என்றாலும் பாதக செயல்களும் கையடக்கத்தில் வருவதுதான் ஒரு சிலருக்கு விபரீதத்தை விளைவிக்கிறது. ஆக நம் மனக்கட்டுப்பாடு எந்தவொரு செயலியையும் பயன்படுத்த வேண்டும் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தெரியாமல் செயலிகளில் வரும் போலி விளம்பரங்களைக் கண்டால் இருப்பதை இழந்துவிட்டுதான் நிற்க வேண்டும்.
அதாவது வாழ்க்கை என்பது பள்ளம் மேடு போன்றதுதான். பணம் இருப்பவர்களுக்கு கவலையில்லை. நடுத்தரக்குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எண்ணி எண்ணிதான் செலவிட வேண்டும். ஆனால் போலி ஆசாமிகள் நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினைத்தான் ஆசைக்காட்டி குறிவைக்கிறார்கள். ஆசையின் காரணமாக நம்பி ஏமாந்தவர்கள் பலர். ஒருசிலர் வெளியில் சொல்கின்றனர்.பலர்சொல்வதே இல்லை. ஒரு சிலர் சொல்லாமல் தன்னை மட்டும்அல்லாமல் குடும்பத்தோடு மாய்த்துக்கொள்கின்றனர்.
''வரவறியாமல் செலவினமென்றால் நிலவரமெல்லாம் கலவரமாகும்'' அந்த வகையில் வருமானத்திற்கு தகுந்த செலவுகளை மட்டும் மேற்கொண்டு எளிமையாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புமைப்படுத்தி வாழக்கூடாது. அவரவர்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப வாழ்க்கை செயல்பாடுகள் இருக்கும். பிறரோடு எந்த சூழ்நிலையிலும் உங்களை ஒப்புமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். வருமானத்துக்கு மீறி கடனை வாங்கிவிட்டு பின்னர் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும்போது பலர் விபரீத விளைவுகளை மேற்கொள்கின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். வாழ்க்கையில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. முழுவதையும் இழந்தபின் புது வாழ்வு துவங்கி நீந்திக்கரையேறிவர்களும் நம் நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர். மன வலிமைதான் முக்கியம். உங்கள் நம்பிக்கையை எந்த சூழ்நிலையிலும் இ ழந்து விடக்கூடாது. எந்த விஷயமானாலும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம். கடன் விஷயத்தினைப் பொறுத்தவரை நம்மால் திருப்பி செலுத்த முடிந்த அளவு மட்டுந்தான் எமர்ஜென்சிக்கு வாங்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கினால்நிலைமை மோசமாகத்தான் ஆகும்...
மாணவ, மாணவிகளுக்கு:
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.கடின உழைப்புக்கு ஈடுஇணை ஏதும் இல்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப நம் முயற்சியில்தான் எல்லாமே அடங்கியுள்ளது. ஒரு முறை தோல்விகண்டவுடன் விபரீத முடிவுகளை மேற்கொள்வதை கைவிடுஙகள். தோல்வி கண்டாலும் அது வெற்றிக்கு ஒரு படி என நினைத்து மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதுதான் முறை. அதைக் கைவிட்டு மாணவ, மாணவிகள் விபரீத விளைவுகளை நாடுவது தேவையற்றது. நீட்தேர்வு என்று அல்ல நாம் சரியாக படிக்காவிட்டால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும். அதற்கு காரணம் நாம் தாம். யாரையும் குறை சொல்லக்கூடாது. உங்களால் நீட் தேர்வு தேற முடியாவிட்டால் எத்தனை படிப்புகள் நம் நாட்டில் உள்ளது? அதற்கு மாறிக்கொள்ளுங்க...காலமும் நேரமும் வீணாகாது.
ஆக இவ்வுலகில் வாழ்வதற்கு பல வழிகள் உள்ளன. அவையனைத்துக்கும் நமக்கு தேவையான மூலதனம் என்ன வென்று தெரியுமா? நம்பிக்கை, விடாமுயற்சி,கடின உழைப்பு இந்த மூன்று காரணிகளை மட்டும் நீங்கள் முறையாக செயல்படுத்தி பாருங்கள்...நீங்கள் எதைத்தொட்டாலும் வெற்றி தான்... கண்டிப்பாக மீண்டும் சொல்கிறேன் கஷ்டப்பட்டால் நிச்சயம் பலன் உண்டு அது வெற்றிதான்... வாழ நினைத்தால் வாழலாம்... பல வழிகள் உள்ளன...என்பதை நினைவில் நிறுத்துங்கள்... வழி பிறக்கும்.
(இன்னும் வளரும்)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu