selfconfidence series manase...manase...15- முயன்றால் முடியாதது எதுவுமில்லை..! 'முயலாமை'முயல் ஆமை கதையாகும்..!..

selfconfidence series manase...manase...15-  முயன்றால் முடியாதது எதுவுமில்லை..!  முயலாமைமுயல் ஆமை கதையாகும்..!..
X
Self Confidence Quotes in Tamil - வாழ்க்கைன்னா முயற்சி இருக்கணும். முயற்சி இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.. எந்த விஷயமானாலும் முயற்சி என்பது முக்கியத்துவம் பெறுகிறது வாழ்க்கையில்.....

selfconfidence series manase...manase...15


selfconfidence series manase...manase...15 மேலே கூறிய கருத்தை சொன்னவர்; வின்ஸ்டன் சர்ச்சில்

நாம் இன்றுஇந்த நிலைமைக்கு வந்துஇருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு நாம் நமக்கு தெரியாமல் செய்த முயற்சிதான் என்று சொல்ல வேண்டும்.ஆர்வம் என்று வந்துவிட்டால் தானாகவே முயற்சி என்பது வந்துவிடும்.அதுபோல்தான் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வம் வந்துவிட்டால் உங்களால் இவ்வுலகில் முடியாதது எதுவுமில்லை என்ற மன பக்குவத்துக்கு நீங்கள் வருவதோடு தன்னம்பிக்கை அதிகரிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கைன்னங்க..என்னங்க? எண்ணங்கள்தான் வாழ்க்கை... சுவாமி விவேகானந்தர் சொன்னது மாதிரி நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். நீ உன்னை வலிமையற்றவன் எனநினைத்தால் வலிமையற்றவனாகிறாய். அதுவே நீ உன்னை வலிமையானவன் என்று நினைத்தால் வலிமையானவனாகிறாய்...எண்ணம்போல்தான் வாழ்க்கையானது அமைகிறது.

அந்த வகையில் நாம் செய்யும் எந்தசெயலாக இருந்தாலும் முயற்சி என்பது தேவை. முயற்சி இல்லாவிட்டால் எந்தவொரு செயலுக்கும் முன்னேற்றம் இருக்காது. ஆமாங்க படிக்கிற வேலையில கூட நீங்க முயற்சி செய்து படித்தால்தான் அத்தனை வினாக்களுக்கும் விடை எழுத முடியும். முயற்சி செய்யாமல் விட்டுவிட்டு தேர்வுக்கு சென்றால் எப்படி இருக்கும்? அதில் முன்னேற்றம் இருக்காது.

selfconfidence series manase...manase...15


selfconfidence series manase...manase...15

இறைவன் எல்லோரையும் ஒரே மாதிரிதான் படைக்கிறான். அவரவர்கள் வாழும் சூழ்நிலைக்கேற்ப நம் வாழ்க்கையானது அமைகிறது. எது எப்படி இருந்தாலும் நாம் வளரும் முறை என்று ஒன்று இருக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லாத இடத்தில் கூட நாம் நம்முடைய மனதைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் அதில் நிச்சயம் முன்னேற்றம் கிட்டும். அதாவது மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதுதாங்க முயற்சி. முயற்சியே ஒரு பயிற்சி ஆகவேண்டும். அப்போதுதான் அதன் பலன் நல்ல விளைவுகளை ஏற்படுத்திடுவதாக இருக்கும். இதுபோல் பல ஆயிரம் உதாரணங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்...

இன்று உயர்ந்த பதவி, வேலை என இருப்பவர்கள் அனைவரிடமும் இருந்தது என்ன தெரியுமா? முதலில் முயற்சி , நம்பிக்கை, உழைப்பு இவை மூன்றும்தான்.இவைகள் மூன்றும் அவர்களிடம் இருந்ததால்தான் அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடிந்தது. நீங்களும் அதை பின்பற்றினால் உங்க வாழ்க்கையிலும் வெற்றிதாங்க... அதுவும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஆயிரம் தடைகள் வந்தாலும் உங்கள் மனசு சோர்ந்துவிடக்கூடாது. அதேபோல் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் பாதியில் விட்டுவிடக்கூடாது. திட்டம் போட்டு உங்களுக்கு எது முடியுமோ அதில்மட்டுந்தான் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து சம்பந்தமே இல்லாத,அல்லது எதுவுமே அடிப்படைகூட தெரியாத வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு நான் முயற்சி செய்தேன் முன்னேற்றமே கிடைக்கவில்லை என்று சொல்வது போல் அபத்தம் ஒன்றுமே கிடையாது.

selfconfidence series manase...manase...15


selfconfidence series manase...manase...15

ஆனால் இக்கால இளைய சமுதாயமோ கல்லுாரி வரை படிக்கிறார்களே ஒழிய எந்தவித முயற்சியும் , எதிர்கால திட்டமும் இல்லாமல் ஒரு சில மாணவர்கள்இருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது. கவிஞர் கண்ணதாசன் சொன்னதுபோல் இந்த குமரப்பருவத்தில் நாம் செய்யும் காரியங்கள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். இதில் தடம்புரண்டு போய்விட்டால் வாழ்க்கையில் கஷ்டந்தான் படவேண்டும். என்பது போல் இன்றைய இளையோர் தற்காலிக சந்தோஷத்தில்தான் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுவும் இ ப்போது சொல்வதற்கே இல்லை. எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் எந்த விஷயமானாலும் எளிதில் பரவும் . பிறந்தோம்...வளர்ந்தோம்... வாழ்ந்தோம் ...என்பது அல்ல வாழ்க்கை என்பது மாணவர்களே. லட்சியங்கள்,.கனவுகள் கொண்டதுதான் வாழ்க்கை. நீ ஒரு வாகனத்தினை எடுக்கிறாய் எங்கு செல்கிறோம்? என முன்பே திட்டமிடுவது போல் உன் வாழ்க்கை பயணத்திற்கும் ஒரு திட்டத்தினை வகுத்துக்கொள் இப்போதே- அதுதான் உன்னை செயல்பட வைக்கும். காலையில் ஆனால் விழிப்பது.... இரவானால் படுக்கையில் போய் படுப்பது அல்ல வாழ்க்கை...

selfconfidence series manase...manase...15


selfconfidence series manase...manase...15

வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நீ இருக்கும்போதும்...இறக்கும்போதும் உன் பெயர் சொல்லவேண்டும்...அந்த அளவிற்கு உன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்... அதாவது நாம் இந்த சமூகத்திற்கோ அல்லது நம் குடும்பத்திற்கோ... உற்றார் உறவுகளுக்கோ... நண்பர்களுக்கோ... நாலுவிஷயங்கள் நல்லது செய்திருக்க வேண்டும். அப்போதுதான் நீ மற்றவர்கள் மனதில் இடம் பெறுவாய்...யாரோடும் பேசாமல் செல்போனில் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் நீ வெளியுலக வட்டார பழக்கம் இல்லாதவனாக முத்திரை குத்தப்படுவாய். பிற்காலத்தில் எந்த ஒரு காரியத்துக்கும் நீ மற்றவர்களை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு கடைசியில் தள்ளப்பட்டுவிடுவாய்.

எனவே படிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. படிப்போடு ஒரு சில நல்ல அனுபவங்களையும் நாம் நம் இளைய வயதில் பெற்றுக்கொள்ளவேண்டும் அதுதான் முழுமையான வாழ்க்கை... அப்பா.. அம்மா.. உள்ளனர், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.. என நீ புத்தகப் புழுவாய் இருந்தால் அது நிச்சயம் சரிவராது... எனவே இதுவரை அப்படி இருப்பவர்கள் கூட இனி இந்த நிமிஷத்தில் இருந்து மாற்றம் அடையுங்க... நமக்கு நாலு பேரு தெரிஞ்சிருக்கணும்.. அப்போ என்ன நாம பண்ணணும்.. சமூகத்தில் ,உறவுகளில் நாம் நல்ல பழக்க வழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. அப்போது உங்கள் முயற்சியில் அவர்களும் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ உதவும் நிலையில் நிச்சயம் அதனை அவர்கள் செய்வார்கள்...

selfconfidence series manase...manase...15


selfconfidence series manase...manase...15

நாம் முயற்சி செய்யும் காரியம் எதுவானாலும் அதில் நாம் முழு மனசோடு ஈடுபட வேண்டும்.. அப்போதுதான் முன்னேற்றம் எளிதாக வரும்.. அரை மனசோடு செய்யற காரியம் எதுவும் சக்ஸஸ் ஆகாதுங்க... ஒரு சின்ன உதாரணம்... கல்லுாரி அல்லது பள்ளி எதுவாக இருந்தாலும் தேர்வு வைக்கும்போது அதற்கான சிலபஸ் படிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். ஆனால் நாம் என்ன செய்வோம் தெரியுமா? முக்கியமானது என ஒரு சில விடைகளை விட்டுவிட்டு தேர்ந்தெடுத்து படித்துவிட்டு தேர்வுக்கு செல்வோம்...அது என்ன ஆகும்? என்பது உங்களுக்கே தெரியும்..இதுதாங்க... அரை மனசோடு செய்யற காரியம்.


இதுவே அனைத்து சிலபசுக்குண்டான கேள்வி-பதில் படித்துச் செல்வோரின் முயற்சியானது முன்னேற்றத்தில் கொண்டு போய் விடும்...இதுதாங்க வித்தியாசம்.. எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுமுயற்சி இல்லாவிட்டால் சக்ஸஸ் நம்மை விட்டு விலகிப்போய்விடும்.. எனவே எதுவாக இருந்தாலும் முழுமனசோடு முயற்சியுங்க...அது வெற்றியில்தாங்க முடியும்...

''முயற்சி இல்லாதோருடைய வாழ்க்கை நங்கூரமில்லா கப்பலைப்போன்றது.''

(இன்னும் வளரும்...)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story