மனசே....மனசே...தன்னம்பிக்கை தொடர்-6 தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறு....
![மனசே....மனசே...தன்னம்பிக்கை தொடர்-6 தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறு.... மனசே....மனசே...தன்னம்பிக்கை தொடர்-6 தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறு....](https://www.nativenews.in/h-upload/2022/08/17/1578257-motivatrion-image-2.webp)
பல நிலைகளைக் கடந்து போனால்தான் பட்டம் கூட கிட்டும்.....வெற்றி சாதாரணமானது அல்ல ( மாதிரி படம் )
self confidence series manase ...manase.. 6
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா? நடப்பது தான்நடக்கும். ஒரு சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காமலும் நடக்கும். இதுதான் வாழ்க்கை .எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதை விட எதிர்பார்க்காமல் அடுத்தசெயலில் இறங்கி பாருங்கள்...அது வெற்றியில்தான் முடியும். எனவே வாழ்க்கையில் எதிர்பார்ப்பை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள் .. வாழ்வு உன் வசமாகும்.
எந்தவொரு செயலும் முயற்சி இல்லாமல் முடியவே முடியாது. வெற்றி என்பதை அவ்வளவு சாதாரணமாக பெற்றுவிட முடியாது. அது படிப்பாகட்டும், வேலையாகட்டும், விளையாட்டு போட்டிகளாகட்டும்.. வெற்றி எனும் இலக்கினை தொட போராட வேண்டும். அவ்வளவு சாதாரணமாக வெற்றி கிடைத்துவிடாது. உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாட்டை எடுங்க... எதிரணி எடுக்கும் ரன்களுக்கு மேல் 1 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறார்கள்.ஒருசில நேரத்தில் இரண்டு அணிகளுமே சமமான ரன்களை கடைசி ஓவரில் பெற்றுவிடுவார்கள்.கடைசியில் சூப்பர் ஓவரில் கஷ்டப்பட்டு வெற்றிக்கோட்டினை தொடுவதை நாம் கண்ணார கண்டிருக்கிறோம்.
தடைகளை தகர்த்தெறியுங்க
எந்த ஒரு முயற்சியும்கஷ்டப்படாமல் முடியாது. அதேபோல்வெற்றியும் சாதாரணமாக கிடைத்து விடுவதல்ல. வெற்றிக்கோட்டினைத் தொட இடையில் எவ்வளவு தடைகள்? அனைத்து தடைகளையும் தகர்த்தெறிபவர்களுக்கு மட்டுமே வெற்றிக்கனியானது கிட்டும். தடை வந்துவிட்டது என மூலையில் சோர்ந்துவிட்டால் வெற்றிக்கு வழி வகுக்காது. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் இதுபோல் தடைகள் சர்வ சாதாரணமாக வரும். க்ளைமேக்ஸ் நேரத்தில் திடீரென பெரிய தடை வரும். அதனை எப்படி தகர்த்தெறிவது? என நாம் யோசிக்க வேண்டுமே தவிர தடை வந்துவிட்டதால் வெற்றி பறிபோகிறதே என கவலையில் ஆழ்ந்துவிடக்கூடாது.
எத்தனை தடைகள் வந்தாலும் அதனை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளவேண்டும். எந்தவிதமான தடை என ஆராய்ச்சி செய்து அதனை முறியடிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும். அதற்கு பின்னர் தைரியமாக களம்இறங்க வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கனியானது ஈஸியாக கிட்டும். அதைவிடுத்து தடைகளை கண்டு தயங்கினால் உங்களைச் சுற்றி வளையம் அமைத்துவிடும். பின்னர் அதிலிருந்து வெளி வருவது என்பது கடினம்.
வெற்றிக்கு திட்டமிடுங்க
எந்த ஒரு வெற்றிக்கும் முன்திட்டமிடுதல் என்பது அவசியம். மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறவேண்டும் எனில் வருடம் முழுவதும் திட்டமிட்டால் மட்டுமே அந்த இலக்கை எளிதில் அடையமுடியும். சும்மா மனதளவில் நினைத்துவிட்டால் வெற்றி கிட்டாது. பல தியாகங்கள்செய்ய வேண்டி வரும். அப்படி என்றால் துாக்கம் தொலைத்து படித்தால்தான் வெற்றி உங்கள் கையில் கிட்டும். துாங்கிக்கொண்டிருந்தால் வெற்றி துாரமாக போய்விடும். அதேபோல்தான் எல்லா செயலுமே. வெற்றிக்கோடு என்பது சர்வ சாதாரணமாக தொட்டுவிடக்கூடியது அல்ல. பல தடைகள் வரும் . பல தோல்விகள் வரும்...அதனைக் கண்டு அஞ்சக்கூடாது. தடைகளை உரிய முறையில் தகர்த்தெறிந்தால்தான் வெற்றி உங்கள் பின்னால் வரும்... தடையைக் கண்டு தயங்கினால்வெற்றி விலகி போய்விடும்.
முயற்சி செய்யுங்க... முன்னேற்றம் கிட்டும்....
இன்றைய உழைப்பு, தியாகம், நாளைய வெற்றியாகும்.
(இன்னும் வளரும்...)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu