மனசே..மனசே..! முயற்சி செய்ய தயங்காதே..! முயலும்போது முட்கள் கூட முத்தமிடும்..!

மனசே..மனசே..! முயற்சி செய்ய தயங்காதே..!  முயலும்போது முட்கள் கூட  முத்தமிடும்..!
X
Self Confidence in Tamil-வாழ்க்கையில் நாம் முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை... இடையில் நிறுத்திவிடக்கூடாது...தொடர்முயற்சி எப்போதும் வெற்றியைத்தான் தரும்.

Self Confidence in Tamil-


self confidence series manase manase-11

வாழ்க்கையில இன்றளவில்முன்னேறியவர்கள் எல்லோரிடமும் சென்று நீங்கள் எப்படி இந்த அளவிற்கு முன்னேற்றத்தினை கண்டீர்கள் என கேட்டால் அவர்கள் சொல்லும் ஒத்தை வார்த்தை என்ன தெரியுமா? முயற்சி என்று தான்சொல்வார்கள்.

வாழ்க்கையின் அத்தனை வெற்றிக்கும் காரணம் முயற்சியும் திட்டமிடலும்தாங்க.. வெறுமனே முயற்சி மட்டும் செஞ்சா முன்னேற முடியாதுங்களா... திட்டமிடலும் தேவையா?- ன்னு கேட்கறீங்களா? நிச்சயமா திட்டமிட்டாதான் கரெக்டா வெற்றிக்கோட்டினை இடர்ப்பாடு இல்லாமல் தொட முடியும். திட்டமிடாவிட்டால் எல்லாமே குழப்பமாகிவிடும்.

நீங்க ஒன்று தெரிஞ்சுக்கங்க.. எந்த ஒரு செயலுமே முன்திட்டமிடல் முயற்சி இல்லாமல் வெற்றியை பெற முடியாது. முயற்சி முதல்கட்டம் என்றால் திட்டமிடல் அதன் இரண்டாவது கட்டமாக சொல்லலாம். ஒரே முயற்சியில் வெற்றியை அடைந்துவிட முடியுமா? என கேட்பவர்களுக்குதாங்க இது... கண்டிப்பாக உறுதியாக சொல்லிவிட முடியாது. பல கட்ட முயற்சிக்கு பின் கிடைக்கும் வெற்றியும்இருக்குதுங்க... அது நீங்க முயற்சிக்கிற மேட்டரைப் பொறுத்துதான் இதைச் சொல்ல முடியுங்க... பலகட்டங்களை அடையவேண்டியது இருந்தால் கண்டிப்பா பல கட்டத்தில் நாம் முயற்சி எடுத்துதான் ஆகணுங்க...

உதாரணத்திற்கு ஒரு சினிமா டைரக்டரை எடுத்துக்கோங்க. அந்த படம் முதல் நாள் ஷீட்டிங்கில் இருந்து டைரக்டர் எடுக்கும் கடின முயற்சிதான் கடைசியில் வெற்றிப்படமாகுதுங்க... அவருடைய முயற்சியில் எங்காவது ஓரிடத்தில் தொய்வு ஏற்பட்டது என்றால் அவரால் வெற்றிப்படத்தினை தர முடியாதுங்க... தொடர் முயற்சிதாங்க வெற்றியைத் தரும்.. ஒரு கட்டத்தில் வெற்றி பெற கடுமையாக உழைக்கணுங்க...

self confidence series manase manase-11

போட்டித்தேர்வுகள்

கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே உங்களுக்குள் ஒரு லட்சியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி கனவு காணவேண்டும். அதாவது டிகிரி , டிப்ளமோ முடித்தவுடன் நாம் எந்த வேலைக்கு செல்லவேண்டும்? என்பதைப்பற்றி நீங்கள் முன்னதாகவே முடிவு செய்துகொள்ளவேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

எதிர்காலம் உங்களுக்கு ஸ்திரமாக அமைக்க வேண்டும் என்றால் மத்திய , மாநில அரசு அறிவிக்கும் போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும். போட்டித்தேர்வுகள் என்றால் சாதாரணமாக எழுதி விட முடியாது. வருடம் முழுக்க நீங்கள் தொடர்ந்து தினந்தோறும் படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 6மணிநேரத்திற்கும் மேலாக படிக்க வேண்டும். ஒரு நாள் கூட மிஸ் ஆக கூடாது. இப்படி தேடி தேடி படித்தால்தான் போட்டித்தேர்வினை சுலபமாக எழுத முடியும்.அப்ளிகேஷன் போட்டுவிட்டு மீண்டும் தேர்வன்று போய் எழுதினால் நீங்கள் கட்டும் கட்டணம் வீணாகிவிடும் என்பதை மறவாதீர்கள். தொடர்ந்து முயற்சித்தால்தான் வெற்றி கிட்டும்.

self confidence series manase manase-11

இதற்கென நீங்கள் தனியாக நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். கல்லுாரியில் படிக்கும்போதே கடைசி ஆண்டில் இருந்து முயற்சிக்கலாம். தமிழக அரசு போட்டித்தேர்வுகளுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி டிஎன்பிஎஸ்சி குரூப்.- 4 க்கு பிளஸ் 2 இருந்தால்போதும். நீங்கள் தேர்வு எழுதலாம். படிக்கும் காலத்திலேயே இதுபோன்ற தேர்வுகளை நீங்கள் எழுத ஆரம்பித்துவிட்டால் பாடங்களும் உங்கள் நினைவில் இருக்கும் . விடை எளிதில் கிடைக்கும். எனவேமுயற்சி செய்ய ஆரம்பியுங்கள்.. அதற்கு முன்னதாக எந்த தேர்வை எழுதுவது என முன்திட்டமிடுங்கள்... உங்கள் அறிவுக்கு எ்ட்டியவரை எது எளிதோ அதனை தேர்ந்தெடுங்கள். பின்னர் சுயமாக படிப்பதா? அல்லது கோச்சிங் சென்டரில் சேர்வதாஎன முடிவெடுங்கள்...

இதற்காக பல போட்டித்தேர்வு கோச்சிங்சென்டர்கள் நாட்டில் இருந்தாலும் நல்லதாக நீங்களே தேர்வுசெய்யுங்க தேவைப்பட்டால் . இல்லாவிட்டால் நீங்களே இதற்காக தினந்தோறும் தயார்செய்ய வேண்டும். அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட சிலபஸீக்கு தகுந்தாற்போல் லைப்ரரிக்கு சென்றால் அங்குள்ள புத்தகங்களில் இருந்து நோட்ஸ் சேகரிக்கலாம்.அல்லது மாவட்ட மைய நுாலகங்களில் போட்டித்தேர்வு தயார் செய்வதற்கு என தனி செக்‌ஷன் உள்ளது. அங்கு சென்று கூட நாம் தினமும் படிக்கலாம். எது உங்களுக்கு சரி என படுகிறதோ அதனை தேர்வுசெய்யுங்க... தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே முட்களும் முத்தமிடும்...

முயற்சியே வெற்றி தரும்.... மறவாதீங்க...

(இன்னும் வளரும்...)



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil