மனசே....மனசே... தன்னம்பிக்கை தொடர்-2 'நம்பிக்கையே வாழ்க்கை'
Self Confidence Tips- மனசே.... மனசே ... தன்னம்பிக்கைத் தொடர் -2
''நம்பிக்கையே வாழ்க்கை ''
மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்- சொற்றொடருக்கு ஏற்ப நம் அனைத்துசெயல்பாடுகளுமே மனதை மையமாக வைத்தே நடக்கிறது. காலையில் எழும்போது என்ன மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ? அதேபோல் அன்றைய நாள் முழுவதும் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் மனம் நம் வாழ்வின் மையமாக இருக்கிறது.
புத்துணர்ச்சி
காலை எழும்போது நம் மனம் எந்த நிலையில் இருந்தாலும் மனதை நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மனதின் முடிவுக்கு நாம் சென்றால் வேறாகிவிடும். எனவே மனதை எந்த நிலையில்இருந்தாலும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதாவது சோர்வாக இருந்தாலும் புத்துணர்ச்சியோடு இருப்பதை போல் நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்றுதான்சொல்கிறேன். அப்போதுதான்அன்றைய விஷயங்கள் அனைத்தும் நல்லவிதமாக நடந்தேரும்.
மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள் அந்த வகையில் மனம் ஒரு நிலையில் இருக்காது. அதனை ஒரு நிலைக்கு கொண்டு வர நாம்தான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதற்காகவே தியானபயிற்சி, யோகா உள்ளிட்ட மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன.ஆனால் நம்மில் பலரும் நேரமில்லை என்ற ஒரு காரணத்தினை முன்வைத்து இப்பயிற்சிகளை புறக்கணித்துவிடுகிறோம். இது வரை இப்பயிற்சிகளை செய்துவருவோரைப் பற்றி கவலையில்லை. ஆனால் செய்யாதவர்கள் இனியாவது துவங்குங்கள். மனம் வாழ்வை செம்மைப்படுத்தும்.
நம்பிக்கையே வாழ்க்கை
நம்பி கை வையுங்கள் வாழ்க்கை சிறக்கும்- மேற்சொன்ன தலைப்பினை உற்று நோக்கி பாருங்கள். நம்பிக்கையிலும் ''கை'', அதேபோல் வாழ்க்கையிலும் ''கை'' என்ற எழுத்து உள்ளது. ஆக நாம் நம்பிக்கை வைத்தால் வாழ்க்கை சிறக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எதிர்கால வாழ்க்கை பற்றி திட்டமிடுவதாகவே தெரியவில்லை. முயற்சி இல்லாத வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயமாக இருக்காது. ஏதோ வாழ்க்கையில் பிறந்தோம் உண்டோம் வாழ்க்கையை கழித்தோம் என்று வாழ்ந்துவிட்டுசெல்ல கூடாது. வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல , நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமையை இறைவன் அளித்துள்ளான். ஆனால் நாம் அதனை முறைப்படி பயன்படுத்துவதில்லை. இதனால் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறோம்.
படித்து முடித்த இளைஞர்கள் பெரும்பாலும் ஒயிட்காலர் ஜாப்பிற்காக காத்துகிடப்பது மாபெரும்தவறு. இன்றைய உலகில் பெரும்பாலானோர் அவர்கள் படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல்தான் வேலைகளை பார்த்து வருகின்றனர். அவர்கள் படித்த படிப்புக்குண்டான வேலையை பார்ப்பது ஒரு சிலர் மட்டுமே. காரணம் அதற்காக காத்திருந்தால் நமக்கும் வயதாகிவிடும்.காலத்தை வீணடித்தால் மீண்டும் கிடைக்காது. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுவே புத்திசாலித்தனம். வேலை கிடைக்கும் வரை கிடைக்கும் வேலையில் சேர்ந்து அனுபவத்தினை அறிந்து கொள்ளுங்கள். இந்த சிறு அனுபவம் நாளை நீங்கள் சேரப்போகும் நிரந்தர வேலைக்கு சிறந்த வழிகாட்டும்.
நல்ல நட்பு தேவை
முயற்சி,நம்பிக்கை, உண்மை, உழைப்பு இவையனைத்தும் உங்களிடம் இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் யாருமே அவர்களுடைய வாழ்க்கையினை நகர்த்த முடியாது. வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. பலவித அனுபவங்களைக் கொண்டதுதான் வாழ்க்கை. பணத்தினை எப்படி சம்பாதிக்க போகிறோமோ? அதேபோல் நல்ல நண்பர்களை பெற்று கொள்வதும் நலம்பயக்கும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதில் உறுதியாய் இருங்கள்.
நம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கையானது நங்கூரமில்லாத கப்பல் போன்றதுதான். எனவே எந்தவொரு விஷயத்தினையும் நம்பிக்கையோடு விதையுங்கள். அது நிச்சயம் பலனளிக்கும். ஆரம்பமே எதிர்மறையாக நினைத்தோமானால் அது சிக்கலில்தான் முடியும். முடியும் என நம்புங்கள் நிச்சயம் அது முடியும்... நம் எண்ணம்போல்தான் வாழ்க்கையும் அமையும்.சாதாரணமாக பிளாட்பாரங்களில் கடை விரிப்பவர்களை பாருங்கள். அவர்கள் தினம் தினம் வாடிக்கையாளர்கள்நம்மிடம் வந்து வாங்குவார்கள் நிச்சயம் நாம் விற்றுவிடுவோம் என்று நம்பிதான் கடை விரிக்கின்றனர். அவர்களிடம் படிப்பறிவு கூட இருக்காது.
படிப்பறிவு இல்லாதவர்களிடம் நீங்கள் அனுபவத்தில் பார்த்தீர்களானால் நம்பிக்கை, அசாத்திய துணிவு, உழைப்பு, நேர்மையும்கூட இருக்கும். இதனால்தான் அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். இதுவே உங்களுடைய வாழ்க்கைக்கும் அடிப்படை காரணிகள். எனவே இளைஞர்களே தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தினை எந்த விதத்திலும் வீணாக்காமல் படிப்பு, வேலை, முன்னேற்றத்திற்கான நடவடிக்கை என முயற்சி செய்யுங்க... நிச்சயம் நல்ல முடிவுதான் உங்களுக்கு கிடைக்கும்.எனவே உங்களை நீங்களே முதலில் நம்ப துவங்குங்கள்... அப்புறம் பாருங்கள் உங்களுக்கே அபரீத நம்பிக்கை வரும்
பின் அசாத்திய துணிச்சலும் வந்துவிடும். இதுவே ஜெயிப்பதற்கான அடிப்படை காரணிகள். எனவே நம்புவோம் நாளையும் நமதே...
(இன்னும் வளரும்..)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu