மனசே..! மனசே..! தன்னம்பிக்கை தொடர்- 8 பசித்திரு..! தனித்திரு..! விழித்திரு..!

Self Confidence Quotes in Tamil -வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் பல வகையான தியாகங்களை செய்ய வேண்டியதிருக்கும். அப்போதுதான் வெற்றியானது உங்கள் வாசலுக்கு வரும்...

HIGHLIGHTS

மனசே..! மனசே..! தன்னம்பிக்கை தொடர்- 8  பசித்திரு..! தனித்திரு..! விழித்திரு..!
X

தன்னம்பிக்கை (கோப்பு படம்)

manase ... manase... self confidence series-8


Self Confidence Quotes in Tamil -

'' மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்'' என்ற சொற்றொடருக்கு ஏற்ப நம்முடைய அனைத்து செயல்பாடுகளுமே மனதினை மையமாக வைத்தே நடக்கின்றன. உதாரணத்திற்கு நீங்கள்காலையில் எழுந்திருக்கும்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ? அதுபோல்தான்அன்றைய அனைத்து செயல்பாடுகளுமே. இன்று நமக்குஉடம்பு ஒரு மாதிரியாக உள்ளது என நினைத்துவிட்டால் மற்ற வேலைகள் ஓடாது. அதுவே புத்துணர்ச்சியோடு இருந்தால் அன்றைய தினம் அனைத்து செயல்களும் சிறப்பாகவே நடக்கும்.

உங்கள் பாக்கெட்டில் காசு இருந்தால் உங்கள் மனநிலையானது சந்தோஷமாக பூரிப்புடன் இருக்கும்.அதுவே செலவுக்கே பணம் பாக்கெட்டில் இல்லை என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனசு சற்று சோர்வாக இருக்கும். நம்முடைய மனம் ஒருகுரங்கு என ஏன் சொன்னார்கள் தெரியுமா? ஒரு நிமிஷத்துக்கு ஒருமுறை மாறும் இயல்புடையது மனசு. எனவே எப்போதும் உறுதியான முடிவெடுக்க வேண்டும். மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமே ஒழிய மனதின் கட்டுப்பாட்டுக்கு நாம் சென்றுவிட்டால் அவ்வளவுதான். பல பிரச்னைகள் வரும்.

பசித்திரு...

அது என்னங்க பசித்திரு... அப்ப சாப்பிடவே வேண்டாமா ? என கேட்பது தெரிகிறது. பசித்திருத்தல் என்பது அளவோடு உண்டல், போதிய அளவு உண்டல், அதாவது பெருந்தீனி தின்று, மூச்சு விடக் கூட முடியாமல், இரை விழுங்கிய மலைப்பாம்பு நெளிவதைப் போல் வாழாமல், சுறுசுறுப்பாக இயங்குமாறு உணவு உண்ணுதல்.அதிகமாக, அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை ஜீரணம் செய்யவே இரத்த ஓட்டத்தின் பெரும் பகுதி சரியாய் போய்விடுகிறது. இதனால் மற்ற இடங்களுக்கு, முக்கியமாக சிந்தனை செய்யும் மூளைப்பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் செல்லாமல் திசை மாறிப் போவதால்தான், 'வயிறு முட்ட சாப்பிடுபவர்கள் வடிகட்டின முட்டாள்களாய் வாழ்கின்றார்கள் என்ற தன்மைக்கு ஆளாகிப் போகின்றார்கள்.

சிறந்த சிந்தனை, சுறுசுறுப்பான செயல்களுக்குப் பசித்திருத்தல் ஒரு ஒப்பற்ற காரணமாக அமைந்து விடுகிறது.அது இல்லைங்க இது வேற பசிங்க.. அதாவது நீங்கள் முயற்சி செய்யும் காரியத்தினை வெற்றியில் அடைய வைக்க வேண்டும் என்ற பசிதாங்க. அதாவது உங்கள் லட்சிய பசி. மனிதர்கள் அனைவருமே தம்முடைய மனதிற்குள் லட்சிய கனவினை உருவாக்கி கொள்ள வேண்டும். இது கொள்கை அடிப்படையிலானது. அந்த கொள்கை, லட்சியத்தினை அடையும் வரை உங்கள் நினைப்பு அனைத்தும் அதன் மேல் இருக்க வேண்டும்.அதாவது எப்படி துப்பாக்கியை குறி பார்த்து சுடும்போது இலக்கு தவறுவதில்லையோ அதுபோல் உங்களுடைய இலக்கினை தவறாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சற்றும் சோர்வுக்கு இடம் தராமல் மேற்கொள்ளவேண்டும். அந்த பசிதாங்க அது... இது தொழில்ப சியாக இருக்கலாம்... படிப்பு மற்றும் உயர் படிப்பு சம்பந்தமானதாகவும் இருக்கலாம்... அல்லது லட்சிய பசியாகவும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்...

தனித்திரு...

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாங்க... தனிமையில் இருப்பது கொடுமை என்று சொல்வார்கள். அது வயதான காலத்தில் தாங்க. இளவயதில் எந்த விஷயமானாலும் தனித்து போராடு...கூட்டணி சேர வேண்டாம் என்பதை பற்றியது. அதாவது உங்களுடைய லட்சியம், கொள்கைகளை அடைய வேண்டும் என்றால் நீங்கள்உங்களுக்கு நேர்மறை எண்ணத்தோடு கருத்துகளை சொல்பவரின் அருகில் இருங்க... வாழ்க்கையில் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டும். வெற்றி பெற்ற அனைத்து நபர்களையும் கேட்டு பாருங்க. அதைத்தான் சொல்வார்கள். அதாவது ஆசை, அபிலாஷைகளை தியாகம் செய்துவிட்டுதான் இந்தபொசிஷனுக்கே வந்திருப்பார்கள். மற்றவர்களைப்போல் நாமும் இருந்தால் எந்த வெற்றியினையும் அடையவே முடியாது. அதாவது மற்றவர்களுக்கு கொள்கை ,லட்சியம் இருக்குதான்னு நமக்கு தெரியாதுங்க...ஆனால் உங்கள் மனதில் உள்ள லட்சியம் கொள்கைகளுக்கு நீங்கள் ஒரு சில விஷயங்களில்கூட்டணி சேராமல் தனித்து இயங்கினால்தான் சாதனைகளை படைக்க முடியுமுங்க.. கூடா நட்பு கேடாய் முடியும்னு ஒரு நல்ல சொற்றொடரை நினைச்சு பாருங்க... ஆகவே தனித்திருப்பது சாலச்சிறந்தது.தனித்திருக்கும் பண்பினை வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள், சிந்தனைவாதிகளாகவும், சிலர் ;சீரிய திறம்பட செயலாற்றும் வல்லுநர்களாகவும் வாழ்வதை நாம் நேரில் கண்டிருக்கிறோம். ஆகவே முன்னேறும் வாய்ப்பு மனிதனுக்கு வேண்டுமென்றால், தனித்திருத்தல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

விழித்திரு....

ஆம்.. இந்த உலகம் போட்டிகள் நிறைந்ததுங்க. ஒரு பதவிக்கு எத்தனை பேர் போட்டித்தேர்வினை எழுதுகிறார்கள் என்பதை நாம் செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்போம்.. ஆக இந்த உலகத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் எப்போதும் விழித்திருக்க வேண்டும்... சற்று அயர்ந்தால் அவ்வளவு தாங்க... உதாரணத்துக்கு 100மீ. ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அனைவரும் அவரவர்களின் கிரிசில் ரெடியாக இருப்பார்கள். உங்கள் கவனம் சிந்தனை அனைத்தும் ஸ்டார்ட் என்று சொல்வதிலோ அல்லது விசில்அடிப்பதிலோ இருக்க வேண்டும். ஏனெனில் அனைவருமே முதலிடத்தினை நாம் தான் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான்இருப்பார்கள். ஆனால் எப்படி ஒருவரால் மட்டும் முதலிடம் பிடிக்க முடிகிறது.மற்றவர்களை விட அவர் விழிப்போடு இருந்ததால் கரெக்டாக டைமிங்கில் அவர் ஸ்டார்ட் செய்ததின் விளைவு முதலிடம் பெற்றவராகிறார். எனவே எந்தவொரு விஷயத்திலும் விழிப்போடு இருந்தால்தான் வெற்றியை எளிதாக பெறமுடியும். இது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பொருந்தும். எனவே விழிப்போடு இருங்க... வெற்றி இலக்கை அடைய...மனிதன் தனியாக இருக்கும்பொழுது ஆபத்தற்ற ஜீவியாகத்தான் விளங்குகிறான். தனிமையில் சிந்தனை அதிகமாக இருக்குமே தவிர, கொடுமைத்தனம் அதிகம் இருக்காது என்பது அனுபவசாலிகளின் நம்பிக்கை.

ஏற்கனவே சொன்னது போல் நீங்க வெற்றி பெறவேண்டும் என்றால் உங்கள் மனசு வெற்றியை நினைக்கனும்ங்க.. அதாவது நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் நினைத்தீர்களானால் வெற்றி நிச்சயமுங்க... ஆக பசித்திரு... தனித்திரு.... விழி்த்திரு... இம்மூன்றின் முதல் எழுத்துக்களை மட்டும் சேர்த்தி பாருங்களேன்...உங்களுக்கு பதவி கிட்டுமுங்க.... வள்ளலாரின் அன்பான வார்த்தைகளின் வலிமை தாங்க.

பசித்திரு.. .தனித்திரு...விழித்திரு.. பதவி கிட்டும்....

(இன்னும் வளரும்..)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Sep 2022 10:34 AM GMT

Related News