self confidence series- துாக்கி எறிந்தால் விழுந்த இடத்தில் மரம் ஆகு, நம்பிக்கையோடு..!
self confidence series manase...manase.. 13
self confidence series manase...manase.. 13
வாழ்க்கையின்னா வாழ்ந்து பார்க்கணும்ங்க....அதுதான் வாழ்க்கை... வாழ்க்கை என்பது என்ன? கஷ்ட நஷ்டங்கள் உடையதுதான் வாழ்க்கை. எல்லா நேரத்திலும் நாம் சந்தோஷமாகவே இருந்துவிட்டால் அந்த வாழ்க்கையே இனிமையாக இருக்காது. அதற்காகவே இறைவன் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என நாம் உணரும் வகையில் பகுதி பகுதியாக படைத்துள்ளான்.
வாழ்க்கையின் முதல் பாதியில் படாத கஷ்டங்களையும் பட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஆலவிருட்சமாக வளர்ந்தவர்கள் நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்கள் வளர்ந்த விதம் அவர்களுடைய சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்... அந்த வகையில் இளவயதில் கஷ்டப்பட்டு பின்னர் படிப்படியாக உழைத்து முன்னேறியிருப்பார்... சினிமா போல்தான் நம் வாழ்க்கைங்க... எப்படி என கேட்கிறீர்களா? படத்தின் முதல் பாதி சோகமாக இருந்தால் பின்பாதி சந்தோஷமாக இருக்கும்.. அதுவே முதல் பாதி சந்தோஷம் என்றால் பின்பாதி சோகமாக இருக்கும்...இதுபோல் இளவயதில் கஷ்டப்பட்டவர்கள் பின்பகுதியில் நல்ல நிலையை அடைகின்றனர்.அதுவே இளவயதில் சந்தோஷமாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு நிலையின் காரணமாக பின்பாதியில் சங்கடங்களை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவதை காண்கிறோம்.
அதேபோல் நாம் படிக்கும்இடத்திலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ வீட்டிலோ, உறவுகளிடத்திலோ ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவமானப்பட வேண்டிய சூழல் வந்தாலும் அதை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களின் மனதில் வைராக்கியம் இருந்தால் அது போதும் . உங்களின் வளர்ச்சிக்கு அதுவே விதை..
self confidence series manase...manase.. 13
self confidence series manase...manase.. 13
விதையாக வெளியேறி விருட்சமாகுங்க
உங்களை துாக்கி எறிபவர்களுக்கு நீங்கள் விதையாக வெளிவந்து பின்னர் அதனை வளர்த்து மரமாக மாறிக்காட்டவேண்டும் என்பதே தலைப்பு.. அதாவது துாக்கியெறிந்தால் விழுந்த இ டத்தில் மரம் ஆகு,,,என்பது..
உன்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினாலும் நீ நம்பிக்கையை இழக்காமல் உழைத்தால் நீ விருட்சமாவாய்.. ஏனெனில் உழைப்புக்கு அந்த மகிமை உண்டு. எத்தனையோ பேர் நல்ல நிறுவனங்களில் வேலை பார்த்து அதனை விட்டு வெளியேறி இன்று அந்த நிறுவனத்துக்கு இணையாக இவரும் முதலாளியாக உருவெடுத்திருப்பதை நாமே பல செய்திகளில் கண் கூடாக காண்கிறோம். தொழிலைப்பொறுத்தவரை நெளிவு, சுழிவுகளைக் கற்றுக்கொண்டால் போதும்.. அதாவது நிர்வகிக்கும் திறமையைத் திறம்பட கற்றுக்கொண்டால் நமக்கு நேரம் வரும்போது நாமும் உரிமையாளராக வாய்ப்புகள் உண்டு. அது நாம் உழைக்கும் விதத்தில் இருக்கிறது.
வெற்றி சாதாரணமல்ல...
ஆனால் ,.,,இன்று பல இளைஞர்கள் குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என கணக்கு போட்டு பல சிக்கல்களில் சிக்கி தவிப்பதை செய்திகள் வாயிலாக அறிகிறோம். இளைஞர்களே...ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... வெற்றி என்பது எட்டாக்கனிதான்.. அதனை அவ்வளவு சீக்கிரம் யாரும் பறித்துவிட முடியாது. காலங்கள் ஆகும்...தாமதம் ஆகும்... பொறுமை , சகிப்புத்தன்மை தேவை... அப்போதுதான் வெற்றி கிடைக்கும். அவசரப்படும் காரியம் சக்ஸஸ் ஆவதில்லை..
self confidence series manase...manase.. 13
self confidence series manase...manase.. 13
கஷ்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லைங்க
வாழ்க்கையில் யாருக்குத்தான் கஷ்டம் இல்லை. பிறப்பால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வளர்ப்பால் வேறுபடுகிறோம். அது நாம் வாழும் சூழலைப்பொறுத்துதான், நம் எண்ணங்களைப் பொறுத்துதான் நம் வாழ்க்கையும் அமைகிறது. ஏன் உதாரணத்திற்கு முன்னாள் மறைந்த நம் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் சிறுவயதில் அவர் படாத கஷ்டங்களா? எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? அவரே எழுதியுள்ளாரா? சாப்பாடு இருக்காதாம்... ஆனால் கடைசியில் அவர் பொறுமையாக இருந்ததால் இந்தியாவின் முதல் குடிமகனாகவே பதவி வகிக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்ததோடு வாழும்போதே பாரதரத்னா விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் எந்த விஷயத்திலும் பொறுமை, நிதானம், சகிப்பு தன்மையோடு இருந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் வீட்டு கதவைத்தட்டும்... எனவே உங்களை யாராவது துாக்கி எறிந்தால் கூட நீங்கள் ஆவேசப்படாமல் வெளியேறி மரமாக மாறி அவர்களை திகைக்க வையுங்க... அதுதான் உங்கள் வைராக்யமாக இருக்கவேண்டும்... எதிர்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்க....
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... வீழ்வதற்கல்ல....
விதைகளே விருட்சமாகின்றன.....வீழ்வது கூட எழுவதற்குத்தான்..!
(இன்னும் வளரும்...)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu